அருள்மிகு மண்ணீஸ்வரர் திருக்கோவில் (மண்ணிவாக்கம்)
God Name : மண்ணீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
பயிங்கல முனிவரின் வேண்டுகோளுக்காக, ம்ருத்யுவை வெல்லும் வரத்தை தேவர்களுக்கு அருளிய மூர்த்தி என்பதால் ம்ருத்யுஞ்சேஸ்வரர் என்பர். ஸ்ரீ சத்யசாயி பாபாவினால் தத்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல நற்பணிகளை செய்துள்ளார். ஆதி காலத்தில், இவ்வாலயத்தின் சுரங்கப் பாதை ஒன்று காஞ்சிபுரம் வரை சென்றதாகக் கூறப்படுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்றும் கூறப்படுகின்றது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மண்ணீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். நான்கடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. தேஜஸ்ஸுடன் கூடிய தேஜோமய லிங்கம். ம்ருத்யுஞ்சேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் மரகதாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மூலஸ்தான வாசலின் இருபுறங்களிலும் பிள்ளையாரும் சுப்ரமண்யரும் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர். அழகாக செதுக்கப்பட்ட திருவுருவங்கள். ஆலிங்கன மூர்த்தியாக விளங்கும் உமா மகேஸ்வரர் இங்கு பிரதோஷ நாயகராக உள்ளார். உற்சவ மூர்த்தங்களான செப்பு படிமங்கள் யாவும் அழகாக உள்ளன. இங்குள்ள நந்தியம் பெருமான், மூலவரைப் பார்த்து இராமல், திரும்பி எதிர் திசையை பார்த்தபடி இருப்பது வித்தியாசமானது. தொண்டைமானுக்கு உதவ போருக்கு புறப்பட ஆயத்தமாகும் நிலையில் காணப்படுவதாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.