அருள்மிகு சத்யமூர்த்தி பெருமாள் திருக்கோவில் (திருமெய்யம்)
God Name : மூலவர்: சத்யமூர்த்தி, உற்சவர்: அழகிய மெய்யர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மலை - சத்யகிரி, தீர்த்தம் - சத்ய புஷ்கரிணி, விமானம் - சத்ய விமானம், பெருமாள் - சத்ய மூர்த்தி, சத்ய க்ஷேத்ரம், சத்யபுரம், சத்யவனம் என ஏழு சத்ய பெருமைகளைக் கொண்ட ஸ்தலம்.
ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்களை அபகரிக்க மது - கைடப அசுரர்கள் முயலுகையில், நித்திரையில் உள்ள விஷ்ணு மூர்த்திக்கு தொந்தரவு தரலாகாது என நினைத்த ஆதிசேஷன் தன் விஷ மூச்சு ஜ்வாலையால் அவர்களை விரட்டியடிக்கிறான். விஷ்ணுவின் அனுமதியின்றி இவ்வாறு செய்து விட்டோமே என அஞ்சி தனது ஐந்து தலைகளை சுருக்கிக் கொண்டு காட்சியளிக்கின்றான். இத்தலத்தில் அவ்வாறே காணலாம்.
இமயமலையிலிருந்து வந்த சத்ய முனிவருக்கு இங்கு பெருமாள் பிரத்யட்சமானதாக ஐதீகம். இந்தக் கோவிலை இந்திரத்யும்னன் எனும் அரசன் கட்டியதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது. இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த சாத்தன் மாறன் என்பவன் இக்கோவிலைப் புதுப்பித்ததாக கல்வெட்டு குறிப்பொன்று கூறுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இங்குள்ள கோட்டையில்தான் சிறிது காலம் ஒளிந்திருந்தனர் என்றும், தொண்டைமானால் காட்டிக் கொடுக்கப்பட்டு, பின் வெள்ளையர்களிடம் பிடிபட்டனர் என்று கூறப்படுகிறது. ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு வளையங்கள் கொண்டுள்ள கோட்டை.
பெருமாளை மெய்யன் என்று மங்களாசாசனம் செய்துள்ளார் ஆழ்வார். மெய்யன் (அல்லது) மெய்யப்பன் எனப்பட்ட பெருமாளை திருமெய்யன் என்று அழைக்கப்பட, அதுவே மருவி திருமயம் என ஊர்ப் பெயர் ஆனதாகக் கூறப்படுகிறது.
மூலவர்: சத்யமூர்த்தி, உற்சவர்: அழகிய மெய்யர், தாயார்: உஜ்ஜீவினித் தாயார்.
மூலஸ்தானத்தில் சத்யமூர்த்திப் பெருமாள் கிழக்கே திருமுகம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவருக்கு சத்ய நாராயணர் மற்றும் மெய்யப்பன் ஆகிய திருநாமங்களும் உண்டு. 108 சாளக்ராம மாலை அணிந்து கம்பீரமாக நின்ற திருக்கோலம்.
மலைச்சரிவையொட்டி அமைக்கப்பட்டுள்ள சந்நிதி. இதைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் பிரயோக சக்கரம் ஏந்திய விஷ்ணு மூர்த்திகளின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
பாறையிலேயே குடைந்தெடுக்கப்பட்ட குகையில் யோகசயன மூர்த்தியாக விஷ்ணு பாம்பணையில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகின்றார். ஆதிசேஷனுடைய ஐந்து தலைகள் குடை பிடிக்கின்றன. ஆதிரங்கம் என்று போற்றுகின்றனர்.
சயனமூர்த்தியைச் சுற்றி கருடன், சித்ரகுப்தன், மார்க்கண்டேயர், நாரதர், பிரம்மன், வசுக்கள், கின்னரர் மற்றும் தேவர்கள் ஆகியோரைக் காணலாம். திருவடிகளருகே பூமி தேவி காணப்படுகிறாள். கிழக்கு கோடியில் மது - கைடப அசுரர்கள் நிற்கின்றனர்.
முதல் மண்டபத்து இடப்புறமாக சந்நிதி கொண்டுள்ள ஆண்டாள், கண்ணன், சக்கரத்தாழ்வார் ஆகியோரையும், வலப்புறமாக சந்நிதி கொண்டுள்ள நரசிம்மரையும் சேவிக்கலாம். இரண்டாம் மண்டபம் கடந்து உஜ்ஜீவினித் தாயர் சந்நிதி கொண்டுள்ளார். உய்ய வந்த நாச்சியார் என்றும் அழைப்பார்கள். படி தாண்டா பத்தினி.
குகைக் கோவிலின் முகப்பு மண்டபத்தை சுந்தர பாண்டியன் குறடு என்பார்கள். ராமர் மற்றும் ஹனுமன் சந்நிதி கொண்டுள்ளனர்.
மஹா மண்டபத்தில் பெரிய திருவடி கூப்பிய கரங்களுடன் காணப்படுகிறார். அழகிய கும்ப பஞ்சரங்கள் சுவரில் காணப்படுகின்றன.
குன்றின் சரிவின் கிழக்கே வராஹப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.