அருள்மிகு தேன்சுவை முருகன் திருக்கோவில் (தேன்மலை)

God Name : ஸ்ரீ முத்துக்குமரஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகரை வணங்கி ஆசி பெற்று மலை ஏறுகின்றனர். மலை ஏறும் வழியில் வருண தீர்த்தம், சரவண தீர்த்தம், பாஸ்கர தீர்த்தம் ஆகிய மூன்று வற்றாத சுனைகளைக் காணலாம். தண்டபாணி ஸ்வாமியின் அபிஷேகத்திற்கு மட்டுமே பாஸ்கர தீர்த்த நீரை பயன்படுத்துகின்றனர். இவற்றைக் கடந்து சென்றால் மூன்று வசந்த மண்டபங்களைக் காணலாம். செவ்வண்ண பாறைகள் கொண்ட இம்மலையில் ஏறும்போதே மனதிற்கு இதமாகவும், உடலுக்கு புத்துணர்வும் கிடைக்கிறது. கொப்பு பாறை, குடகுப் பாறை, சிரிகிரிப் பாறை, அருணோதயப் பாறை, தேவ சந்திர பாறை ஆகிய பாறைகள் உள்ளன. மிகுந்த மூலிகைகள் காணப்படுகின்றன. கொப்பு பாறைகளிலிருந்து கசியும் ப்ருகு நீர் பல கொடிய நோய்களுக்கு நிவாரணமாக விளங்குகிறது. ப்ருகு நீரில் நீராடும் தம்பதியினருக்கு புத்ர பாக்யம் கிட்டுவதாக ஐதீகம். மலை உச்சியில் மூலவரான ஸ்ரீ முத்துக்குமரஸ்வாமி கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள் புரிகின்றார். ஆறுமுகங்களும் அழகிய திருமேனியும் கொண்டு தரிசனம் தருகின்றார். அங்காரகனின் சக்தியும் கூடியுள்ளதாக கூறுகின்றனர். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். கார்த்திகை, விசாகம், பரணி, அஸ்வினி நட்சத்ரங்களிலும், செவ்வாய் மற்றும் பௌர்ணமி தினங்களிலும் வழிபட நற்பலன்கள் கிடைக்கும். இரண்டு கி.மீ சுற்றளவுள்ள இம்மலையை பௌர்ணமியன்று கிரிவலம் வருகின்றனர். செவ்வாய் ஹோரையில் கிரிவலம் வருவது கூடுதல் பலன்களைத் தரும். சித்தர்கள் பலர் தவமிருந்த இடம் இங்குள்ளது. ஏராளமாக சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கு தியானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ பெருமானந்த சித்தர்சுவாமியின் ஜீவசமாதி இங்குள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.