அருள்மிகு மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோவில் (வேந்தன்பட்டி)
God Name : சொக்கலிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலவர்: சொக்கலிங்கேஸ்வரர், அம்பாள்: மீனாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சொக்கலிங்கேஸ்வரர். அன்னை மீனாட்சி அழகே உருவாக உடன் எழுந்தருளியுள்ளார்.
அழகிய கோஷ்ட மூர்த்தங்களுடன் பிள்ளையார், முருகன், நடராஜர், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இங்குள்ள நந்தீஸ்வரரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஸ்ரீ சக்கரம் ஒன்று இயற்கையாகவே அமைந்துள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவில் நந்தியின் அமைப்பில் முக்கால் பங்கு அளவு தோற்றம் கொண்டுள்ளார்.
தினந்தோறும் காலை வேளையில் நந்தீஸ்வரரின் உடல் முழுவதும் நெய் பூசுகின்றனர். நெய் நந்தீஸ்வரர் என்றே பிரபலம்.
நந்தீஸ்வரருக்கு பூசப்படும் நெய்யின் அளவு அதிகமானால் அந்த நெய்யை கிணற்றில் கொட்டி விடுவார்கள்.
நந்தீஸ்வரர் உடலில் பூசப்பட்ட நெய்க்கோ, கிணற்றில் கொட்டப்பட்ட நெய்க்கோ எறும்பு, ஈ போன்ற பூச்சிகள் நெருங்குவதில்லை என்பது நெய்நந்தீஸ்வரரின் சிறப்பு.
இவ்வூர் மக்கள் தத்தம் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளின் பாலை நெய்யாக மாற்றி முதலில் இவருக்கு தந்துவிட்டுத்தான் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்கின்றனர். தை மாத மாட்டுப் பொங்கலன்று நந்தி விழா நடத்துகின்றனர். அபிஷேக ஆராதனைகள் முடித்து, 21 வகையான மாலைகள் சாற்றி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து விழாவை முடிக்கின்றனர்.
சனி மகா பிரதோஷ தினத்தன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
நாட்டுக்கோட்டை நகரத்தாரால் நிர்வகிக்கப்படும் ஆலயம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.