அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் திருக்கோவில் (ரத்னமங்கலம்)
God Name : ஸ்ரீ லட்சுமி குபேரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
இவ்வூரில் லட்சுமிக்குரிய கல்வெட்டுக்கள் தென்பட்டதாலும், பெருமாளின் பெயராக வேங்கடமங்கலம் எனும் ஊரின் அருகே இருப்பதாலும், குபேரனுக்குரிய ரத்னம் என்பதாலும், ரத்னமங்கலத்தில் கோவில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி குபேரர் எழுந்தருளியுள்ளார். அழகிய திரு வதனம். சங்கநிதி - பத்மநிதியை அணைத்தவாறு காட்சி தருகின்றார். சித்தரீணி என்ற துணைவியார் உடன் உள்ளார். அன்னை லட்சுமி தேவியும் உடனிருந்து அருள்பாலிக்கின்றாள்.
மூலவரின் பின்புறம் உற்சவ மூர்த்திகளும், குபேர யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குபேர யந்திரத்திற்கு தாமரை மலராலும், உற்சவருக்கு நாணயங்களாலும் அர்ச்சனை செய்கின்றனர். கரன்ஸி நோட்டுக்களால் அலங்கரிக்கின்றனர்.
கருவறையின் எதிரே குபேரனுக்கு பிடித்த கீரிப்பிள்ளையின் உருவம் அமைத்துள்ளனர்.
சுற்றுப் பிரகார வலத்தில் கண் திருஷ்டி கணபதி, குபேர லிங்கம், வெங்கடாஜலபதி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், பிரம்மா-சரஸ்வதி, அதிருஷ்ட தேவதை, லட்சுமி கணபதி, ஐயப்பன், செல்வ முத்துக் குமரன், பாதாள குபேர லிங்கம், ஆதி சங்கரர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். தியான மண்டபம் ஒன்றும் இருக்கின்றது.
தினமும் அதிகாலையில் குபேரனின் வாஹனமான குதிரைக்கு அஸ்வ பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் குபேரனின் உற்சவ மூர்த்திக்கு, நாமே நாணயங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.