அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (எட்டியத்தளி)

God Name : அகஸ்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

சிவகங்கை

Call : +91-

பொதிகை மலை நோக்கி பயணித்த அகஸ்தியர், இவ்வூருக்கு வந்த போது அழகிய தாமரைகள் மிகுந்த குளத்தைக் கண்டார். அதில் நீராடி, அதன் கரையில் மணலால் லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டார். அகஸ்தியர் உருவாக்கி வழிபட்டதினால் சுவாமிக்கு அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமம். அஷ்டமத்து சனி பிடித்ததினால் பாதிக்கப்பட்ட காளிங்கராயன் எனும் மன்னன், அகஸ்தியரின் உபதேசப்படி இங்கு வந்து அகஸ்தியர் உருவாக்கிய மணல் லிங்கத்தை ஸ்தாபித்து கோயில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு.
மூலவர்: அகஸ்தீஸ்வரர். அம்பாள்: அகிலாண்டேஸ்வரி, அகிலா (இரண்டு). மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். மூலவர் சந்நிதி அருகே அன்னை அகிலாண்டேஸ்வரியும், நவகிரகங்களுக்கு அருகே நவகிரக நாயகியாக அகிலாவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களும் பரிவாரத் தெய்வங்களும் அழகாக இருக்கின்றனர். இங்குள்ள நடராஜர் செப்பு சிலையாக இல்லாமல் கல்லில் உருவான திருமேனியாக இருக்கின்றார். விளங்கும்படியும், இடம் மாறி காட்சி தரும் ராகு/கேது கிரகங்களும் நவகிரக சந்நிதியில் இடம் பெற்றுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.