காதமறவர் காளிக் கோவில் (கீழ்காத்தி கிராமம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
பெரிய மறவர் என்பவரால் கட்டப்பட்ட கோவில் என்பதால் காத மறவர் காளி என்ற பெயர் கொண்டாள்.
நேர்த்திக் கடனாக வேண்டிக் கொள்ளும் ஊர் மக்கள் நிறைய காளி சிலைகளை மண்ணால் செய்து கொண்டு வந்து வைக்கின்றனர். புடவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், காணிக்கையாக வந்த புடவைகளின் நுனியைக் கிழித்து, சந்நிதி முன்பாக உள்ள மரத்தில் கட்டி வேண்டிக் கொள்வார்கள். குழந்தை பிறந்ததும், மரத்தொட்டில் ஒன்றைக் கட்டி இந்த துணியை அதில் வைத்து விடுவார்கள் என கூறப்படுகிறது.
அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலுக்கு வடக்கே இருக்கும் இக்கோவிலுக்கு மேற்கூரை கிடையாது.
பிரதான கருவறையில் காத மறவர் காளி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மிகப் பெரிய திருவுருவம்.
எல்லைத் தெய்வமாக திகழ்கிறாள்.
வலப்பக்கம் பெரிய மீசையுடன் காணப்படும் கருப்பர் சிலையை தரிசிக்கலாம். அடைக்கலம் காத்த அய்யனார் தனி சந்நிதி கொண்டுள்ளார். எதிரே பெரிய வடிவங்களாக யானை மற்றும் குதிரை சிலைகள் காணப்படுகின்றன.
பெரிய கருப்பர் கோவிலும், சின்ன கருப்பர் கோவிலும், 12 அய்யனார்கள் எழுந்தருளியுள்ள கோவிலும், முருக்கு சம்பன் மற்றும் முனீஸ்வரன் கோவிலும் இவ்வூரில் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.