அருள்மிகு ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் (இடையாத்தூர்)
God Name : மூலவர்: ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி, உற்சவர்: ராஜகோபாலர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பாமா-ருக்மணி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தங்களான பாமா - ருக்மணி சஹித ராஜகோபாலர் விக்ரஹங்கள் பேரெழிலுடன் காணப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் துவாரகை கோலம் இங்கு காணப்படுவதால் தென் துவாரகை என்பர். நேர் எதிரே கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீ விஷ்வக்சேனர், தேசிகர், நம்மாழ்வார் ஆகியோரை சேவிக்கலாம். ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். சித்திரைத் திருவிழா, ஏகாதசியன்று கருட வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு ஆகியன சிறப்பாக நடக்கின்றன. பழமையான நாகர் சிலைகளையும், மூவிதழ் கொண்ட வில்வ விருட்சமும் கொண்டுள்ள இவ்வாலயம் 1200 வருடங்கள் பழமையானது என்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.