அருள்மிகு ஆத்மநாத ஸ்வாமி திருக்கோவில் (ஆவுடையார் கோவில்)

God Name : ஆத்மநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

சிவகங்கை

Call : +91-

ஆதிகயிலை, ஜோதிவனம், சிவஞானபுரம், யோகவனம், சதுர்வேதமங்கலம், சிவபுரம், உபதேசபுரம் ஆகிய பெயர்களை

உடைய ஸ்தலம். சிவானந்தம் எனும் பேராற்றில் இறங்கி உயிர்கள் இன்பம் பெரும் ஸ்தலம் என்பதால் பெருந்துறை ்

எனப்படுகிறது.

சோழ நாட்டு கடற்கரையில் நிறைய குதிரைகள் வந்திறங்கி உள்ளதாக கேட்டறிந்த அரிமர்த்தன பாண்டியன், தனது

அமைச்சரான திருவாதவு+ராரை அழைத்து உயர்ரக குதிரைகளை வாங்கி வருமாறு பணித்தான். நாற்பத்தொன்பது ்

கோடி பொன் கொடுத்து தரமான குதிரைகளை வாங்கி வரச் சொன்னான் பாண்டியன். பொன்னைப் பெற்றுக் ்

கொண்டு மதுரையிலிருந்து புறப்பட்ட அமைச்சர் திருப்பெருந்துறை எனப்படும் இவ்வு+ரை வந்தடைந்தார்.

கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், ஞானதேசிகரான வடிவம் கொண்டு திருப்பெருந்துறையை அடைந்தார். ்

நந்தியம்பெருமானும் மானிட வடிவத்தில் பின் தொடர்ந்தார்.

திருப்பெருந்துறையில் ஓய்வெடுக்க தங்கிய அமைச்சர் திருவாதவு+ராரின்் செவிகளை இனிமையான சாமகானம் ்

எட்டியது. ஆவல்மேலிட்டு, கானம் வந்த இடத்தை நோக்கி சென்ற அமைச்சர், அங்கு ஜடாமுடியுடன் கூடிய துறவி ்

ஒருவர் கையில் ஏடுகளுடன், குருந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு சாமகானத்தை பாடிக் கொண்டிருந்ததை ்

கண்டார். துறவியின் எதிரில் பல சீடர்கள் பவ்யமாக உட்கார்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

துறவியின் கையிலுள்ள ஏடுகள் என்ன என்று அமைச்சர் வினவ சிவஞானபோதம் எனும் நூல் என பதில் வந்தது. ்

துறவியின் மீது பக்தி கொண்ட அமைச்சர், அவரை பணிந்து தம்மை பிறவித் தளையிலிருந்து நீக்குமாறும் முக்தி

பெற அருளுமாறும் வேண்டினார். தம்மை இன்னாரென்று அறிவித்துக் கொண்ட துறவி, குருவாக இருந்து ்

அமைச்சருக்கு உபதேசம் செய்தார். குருநாதர், திருவாதவு+ராருக்கு தீட்சா நாமமாக மாணிக்கவாசகர் எனும் ்

பெயரைச் சூட்டி, தனது திருவடிகளை அவர் தலை மீது வைத்து திருவடி தீட்சையும் செய்தருளினார் என வரலாறு.

மன்னனிடமிருந்து குதிரைகள் வாங்க எடுத்த வந்த பொன் அவ்வளவையும், இவ்வு+ர் ஆலயம் கட்ட செலவழித்து ்

விட்டார் அமைச்சர். இதனை அறிந்து கொண்ட அரிமர்த்தன பாண்டியன், குதிரைகளை சீக்கிரமாக அனுப்புமாறு ்

தகவல் அனுப்பினான். ஆவணி மூலத்தன்று குதிரைகளை அனுப்பி வைப்பதாக கூறுமாறு சிவபெருமான் பணித்தார்.

செய்தி கேட்டறிந்த மன்னன், படையாட்களின் மூலமாக நடந்த விஷயங்களையும் தெரிந்து கொண்டதால், வாதவு+ராரை ்

சிறைப் பிடித்து வருமாறு தண்டநாயகர்களை அனுப்பினான். மன்னனின் உத்திரவின்படி திருவதவு+ரார் சிறைப்பட்டு ்

துன்பங்களை அனுபவிக்கலானார்.

தனது துயர் துடைக்க சிவபெருமான வேண்டி நின்றார். சிவபெருமான் தனது சிலம்போசையை மாணிக்கவாசகருக்கு ்

கேட்கும்படி செய்தார். பு+த கணங்களை சேவகர்களாக்கி, தானும் குதிரை சேவகனாக மாறி, காட்டிலுள்ள நரிகளை ்

ஒன்று திரட்டி, பரிகளாக்க (குதிரைகளாக) மாற்றி, பாண்டியனிடம் கொண்டு சென்றார். அஸ்வ சாஸ்திர நிபுணர்கள்

வந்து பாண்டியனிடம் குதிரைகள் மிகவும் உயர்ரகமானவை என்று கூறினார்கள். குதிரை சேவகனாக வந்த சிவன்

கயிறு மாற்றி அரச சேவகர்களிடம் குதிரைகளை தந்துவிட்டு சென்றதும் பரிகளெல்லாம் மீண்டும் நரிகளாக மாறின. ்

மீண்டும் தண்டனைக்குள்ளான அமைச்சரை மீண்டும் காப்பாற்றினார் இறைவன் என வரலாறு நீளுகிறது.

(இதைத் தொடர்ந்து பிட்டடிற்கு மண் சுமந்த படலம்)

திருப்பெருந்துறை கோவிலை தனதுடைமையாக்கி கொள்ள நினைத்த லுண்டாக்கன் எனும் அமைச்சர் இங்கிருந்த ்

முன்னூற்றுவர்களை அடித்து விரட்டி விட்டு ஆக்ரமித்துக் கொண்டான். முன்னூற்றுவர்களுக்கு உதவ வேண்டி, ்

ஆத்மநாதர் ஒரு வயோதிக அந்தணண் வேஷம் கொண்டு பரமசுவாமி எனக் கூறிக் கொண்டு வந்து அரசனிடம் ்

சென்று லுண்டாக்கனின் ஏமாற்று வேலையை பற்றித் தெரிவித்தார். இது எங்கள் நிலம் என்பதற்கு சாட்சியாக பு+மியில் ்

ஒரு வெட்டு வெட்டினால் தண்ணீர் வரும் என்றார். இதை மறுத்த லுண்டாக்கன் காட்டிய இடமெல்லாம் தோண்டிப் ்

பார்த்ததில் தண்ணீர் வெளிப்பட்டது. ஒரு யோசனை சதுர வட்டத்திற்குள் 66 கோடி தீர்த்தங்களை வரவழைத்தார் ்

பரமசுவாமி என ஸ்தல வரலாறு.

மன்னனுக்கே இக்கோவிலின் மீது பக்தி வந்துவிட்டது .பல திருப்பணிகளை செய்துள்ளான். காசியிலிருந்து 300 ்

அர்ச்சகர்களை வரவழைத்து இங்கு குடியமர்த்தி அவர்களை இறைத் தொண்டை ஏற்குமாறு பணித்தான். அவர்களை ்

கௌரவிக்க தங்க கங்கணம் வாங்கியளித்தான். கங்கணத்தில் ஒன்று மிஞ்சிவிடவே ஒரு வயோதிக அர்ச்சகரை ்

தேடிப்பிடித்து கட்டி விட்டான் எனவும், மறுநாள் ஆத்மநாதரை தரிசிக்க சென்றபோது அவரது ஆவுடையில் இந்த ்

கங்கணம் கட்டப்பட்டிருந்து கண்டு மகிழ்ந்தான் எனவும் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.

அர்ச்சகர் வீட்டுக் குழந்தைகளுக்கு வேத சாஸ்திரம் சொல்லிக் கொடுக்க, இறைவனே முதியவர் வடிவில் வந்தார் ்

என்றும் சம்பளமாக புழுங்கலரிசி சாதம், கீரைக் கூட்டு, பாகற்காய் ஆகியன பெற்றார் எனவும் கூறப்படுகிறது. ்

இதனால் ஸ்வாமிக்கு இவற்றை நைவைத்யம் செய்வதோடல்லாமல், ஆலயத்தை சுற்றியுள்ள வீடுகளிலும் உணவு ்

விடுதிகளிலும் இவற்றையே சாப்பிடுகின்றனர்.

ஆனித்திருமஞ்சன விழா - உத்திர நாளை கடை நாளாக கொண்டு, கொண்டாடும் பெருவிழா 10 நாட்களுக்கு ்

ப்ரம்மோத்ஸவம். பக்தோத்வஸம் என்பர். ஆனி உத்திர நட்சத்ர நன்னாளில் திருவாசகம் ஒலித்துக் கொண்டிருக்கும். ்

சிவ பெருமானிடம் மாணிக்கவாசகர்உபதேசம் பெறும் நிகழ்ச்சி நடபெறும். ஆனி மகத்தில் தேரோட்டம் நடைபெறும் .

ஆவணி மூல விழா - சிவபெருமான், பாண்டியனிடம் கயிறு மாற்றிக் கொண்டு குதிரைகளை விற்கும் விழா .

கார்த்திகை தீப விழா - சுளுந்து தீபாராதனை அல்லது அக்னி அபிஷேகம்  ்- எரியாடல்.

மார்கழித் திருவிழா - திருவாதிரையைக் கடை நாளாகக் கொண்டு, கொண்டாடும் பெருவிழா.

மார்கழி திருவிழா 10 நாட்கள், விழாவின்போது - 4ம் நாள் திரிபுரமெரித்தது, 6ம் நாள் ஊர்த்துவ தாண்டவமாடியது, ்

7ம் நாள் பிட்டிற்கு மண் சுமந்தது, 8ம் நாள் எல்லாம் வல்ல சித்தராய் வந்தது, பாண்டிய மன்னனிடம் குதிரை ்

சேவகனாக வந்தது - ஆகிய அலங்காரங்களில் மாணிக்கவாசகரை பவனி வர செய்கின்றனர்.

மூலவர்: ஆத்மநாதர், அம்பாள்: யோகாம்பிகை

கோவிலின் முன்புறமுள்ள நெல்லியடி தீர்த்தக் குளக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வல்லபை விநாயகர்,  ்மூன்றாம்் ்

பிரகாரத்தில் வெய்யிலுகந்த விநாயகர், இரண்டாம் பிரகாரத்தில் அன்னப்பு+ரணி விநாயகர் - கோபாலக் கட்டளை ்

விநாயகர் - நடன விநாயகர் - அழகிய விநாயகர், முதல் பிரகாரத்தில் சொக்க விநாயகர் என்று திரும்பிய பக்கம்

எல்லாம் விநாயகப் பெருமான் கோவில் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

ராஜகோபுரத்தை அடுத்து கனகசபை, இரண்டாம் பிரகாரத்தில் நடன சபை, முதற் பிரகாரத்தில் தேவ சபை, அதை

அடுத்து சத்சபை, சித்சபை, ஆனந்த சபை ஆகிய ஆறு சபைகளைக் காணலாம். தேவ சபையின் விதானத்து நடுவில் ்

மாணிக்கவாசகருக்கு இறைவன் குருந்த மரத்தடியில்  ்வீற்றிருந்து உபதேசிக்கும் காட்சியை சித்தரித்துள்ளனர்.

ஆனந்த சபையான மூலஸ்தானத்தின் நடுவே பீடம் உள்ளது. இது ஓங்கார பீடமாகும். மூலஸ்தானத்தில் மூலவர் ்

திருவுருவமாகவோ லிங்கமாகவோ அல்லாது அரூபமாக எழுந்தருளியுள்ளார். பீடம் மட்டுமே உண்டு. அந்த பீடம் ்

ஆவுடையாராக கருதப்படுகிறது. இதன் மேல் ஒரு குவளையை சாத்தி அபிஷேகம் செய்கின்றனர். ஸ்வாமிக்கு ்

ஆத்மநாதர் எனும் திருநாமம்.

ஆத்மநாதருக்கு - பரமசுவாமி, சதுர்வோபுரேசர், குருந்தவனேசர், மாயாபுரேசர், திரிமூர்த்திதேசிகன், அசுவநாதர், ்

ஷட்சபா ரமணர் ஆகிய திருநாமங்களும் உண்டு.

ஸ்வாமி கருவைறை பரவெளியான பேரண்ட பெருவெளியைக் குறிக்கிறது. இதை உணர்த்தும் வகையில் 27 ்

நட்சத்திரங்களை 27 தீபங்களாக பிரபாவளியில் அமைத்துள்ளனர். ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய ்

மும்மூர்த்திக்களும் முறையே சூரிய - சந்திர - அக்னி மண்டலங்களில் இருப்பதை குறிக்க மூன்று வித ்

வண்ணங்களில் விளக்குகள் இடம் பெற்றுள்ளன.

இறைவன் அரூபமாக இருப்பதால் இக்கோவிலில் நந்தியம்பெருமான், த்வஜஸ்தம்பம், பலிபீடம், மற்றும் ்

சண்டிகேஸ்வரர் ஆகியவற்றை காணமுடியாது.

வெள்ளிக்கதவுகள் பொருத்தப்பட்ட சத்சபையின் நடுவே ஏழடி அகலம் கொண்ட படைகல் உள்ளது.  ்இதில் ்

அன்னப்பு+ரணியை ஆவாஹனம் செய்துள்ளனர். ஸ்வாமி சந்நிதிக்கு முன்பாக உள்ள ஒரு கல் மேடையில் ்

(படைகல்) மீது சுடச்சுட இருக்கும் புழுங்கலரிசி சாதம், கீரை மற்றும் பாகற்காய் ஆகியவற்றை பரப்பி வைத்து ்

நைவைத்யம் செய்வார்கள். இதிலிருந்து கிளம்பும் சூடான ஆவி சந்நிதியை நிறைத்திருக்கும். மேற்கிலுள்ள ்

ஜன்னல்் ஒன்றின் வழியே அன்னப்படையலின் புகை அம்பிகை சந்நிதியை சென்றடைகிறது.

சந்நிதியில் லிங்கம் இன்றி ஆவுடை மட்டுமே இருப்பதாலும், சூடான சாதத்தின் ஆவி சந்நிதியை நிறைத்து ்

இருப்பதாலும், இத்தலம் ஆவுடையார் கோவில் எனப் பெயருற்றது.

மேற்கு நோக்கிய சந்நிதியில் மாணிக்கவாசகர் எழுந்தருளியுள்ளார். மிகப் பெரிய சிலை. சந்நிதியில் எப்போதும் ்

திருவாசகப் பாராயணம் நடந்து கொண்டிருக்கும். சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் உள்ளார் மாணிக்கவாசகர். ்

ஆண்டவனின் அடியார் உயர்ந்தவனே என்பதை எடுத்துக்காட்ட இங்கு உத்ஸவங்கள் எல்லாம் மாணிக்கவாசகருக்கே ்

செய்யப்படுகிறது.

மாணிக்கவாசகரின் சந்நிதியை எதிர் நோக்கிய வண்ணம் மற்றும் ஆத்மநாதர் சந்நிதியின் வடமேற்கே உள்ள முதல் ்

பிரகாரத்தில் அமைந்துள்ளது அம்பாள் சந்நிதி. ்

அம்பாள் யோகாம்பிகைக்கும் உருவம் கிடையாது. அரூபமாகத்தான் எழுந்தருளியுள்ளார். பீடம் மட்டுமே உள்ளது. ்

சந்நிதியை சுற்றி சலாகை அடித்த சுவர். துவாரங்களின் வழியாகத்தான் கற்பு+ர ஆரத்தியை சேவிக்க வேண்டும். ்

கிழக்கு பார்த்த சந்நிதி. யோகத்தில் இருப்பதாக ஐதீகம். தவ யோக தேவியாயாக விளங்குகிறாள். சிவயோக நாயகி ்

என்றும் யோக பாலா என்றும் போற்றுகின்றனர்.

அம்பிகையின் கருவறையில்், உயர்ந்த பீடத்தில், திருவடிகள் தங்கத்தாலான ஸ்ரீ சக்ரத்தின் மீது நிலைப்படுத்தப்பட்டு

உள்ளது.  ்இந்த ஸ்ரீ சக்கரம் 43 முக்கோணங்களையும் 3 பு+ வட்டங்களையும், 3 சதுரங்களையும் கொண்டுள்ளன. ்

கோணங்களில் அட்சரங்கள் எழுதப்பட்டுள்ளன.

அம்பிகையின் திருவடிகளுக்கும், ஸ்ரீ சக்கரத்திற்கும் செய்யம் அபிஷேக நீர் கோமுகியின் வழியாக ஒரு தொட்டியில் ்

விழுகிறது. இதை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்கின்றனர்.

தெற்கு ரத வீதி கோபுர வழிச் சென்றால் நாம் காண்பது ரகுநாத பு+பாலன் மண்டபம் எனப்படு்ம் ஆயிரக்கால் மண்டபம். ்

வாசலையொட்டி அமைந்துள்ள தூண்களில் பத்தடி உயரம் கொண்ட இரண்டு வீரபத்ரர்கள் தரிசனம் தருகின்றனர். ்

ஒருவர் அகோர வீரபத்ரர். பத்து திருக்கரங்கள்.  ்தொடை மீது அழுத்திப் பிடிக்கப்பட்டுள்ள தட்சப் பிரஜாபதியின் ்

தலையை பற்றிக் கொண்டிருக்கும் இடது முன் கையும், ஆயுதங்களுடன் கூடிய மற்ற கைகளுமாக காட்சி தருகிறார். ்

மற்றவர் அக்னி விரபத்ரர்.

மற்றைய தூண்களில் உக்ர நரசிம்மர், ஊர்த்துவ தாண்டவர், ஆடலில் தோற்ற காளி, சங்கர நாராயணர், வில்லேந்திய ்

முருகன், ரிஷபாந்தகர் ஆகியோரின் பெரிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.. 20 அடி உயரமும் 7 அடி அகலமும் கொண்ட ்

தூண்கள். உச்சிஷ்ட கணபதி மற்றும் சிகிவாகனர் ஆகியோரின் சிற்பங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து வசந்த மண்டபம் எனப்படும் ஊஞ்சல் மண்டபம், தியாகராஜ மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் என அனேக ்

மண்டபங்களை் காணலாம்.

மூன்றாம் பிரகாரத்தில், மூலஸ்தானத்திற்கு நேராக உள்ள பஞ்சாட்சர மண்டபத்து தூண்களில் அசுவநாதர் எனப்படும் ்

குதிரைச்சாமி இடம் பெற்றுள்ளார். எதிரிலுள்ள தூணில் மாணிக்கவாசகர் காணப்படுகிறார். அரிமர்த்தன பாண்டியன் ்

மற்றும் குறுநில மன்னர்கள்ின் சிலைகளைக் காணலாம். மண்டபத்தின் விதானத்தில் நாயன்மார்களின் வரலாற்று ்

ஓவியங்களை வரைந்துள்ளனர்.

தியாகராஜ மண்டபம் மற்றும் அதையொட்டியுள்ள ஊஞ்சல் மண்டபம் இரண்டிலும் காணப்படும் சிற்பங்கள் மிகச் ்

சிறந்தவை. ஆடம்பரமான கோலத்தில் அமைச்சராகவும், துறவிக் கோலத்தில் அடியாராகவும் காட்சி தரும் ்

மாணிக்கவாசகரின் இருவேறு தோற்றங்கள் அழகானவை. இரண்டிலும் வேற்றுமைகளை காட்டி உருவாக்கிய ்

சிற்பியை பாராட்ட வேண்டும்.

மண்டபத்தின் மேற்கில் ஆகாசமூர்த்தி எனப்படும் முனீசுவரர் எழுந்தருளியுள்ளார்.

இரண்டாம் பிரகாரத்து வடமேற்கு மூலையில் உள்ள ஸ்தல விருட்சமான குருந்த மரத்தடியில் ஆச்சார்ய வடிவில் ்

தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மாணிக்கவாசகர் தீட்சை பெற்ற இடம். மரத்தடியில் யோகபீடத்தில் அமர்ந்த ்

ஆத்மநாதர் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தார் எனக் கூறப்படுகிறது.

கோவிலுக்கு முன்னால் நெல்லியடி தீரத்தம் இருக்கின்றது. வெளிப் பிராகாரத்தில் அக்னி தீர்த்தம் தெப்பக்குளமாக ்

இருக்கின்றது.

திருவாசக ஸ்தலம்

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.