அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில் (செங்கண்மால்)
God Name : செங்கண்மாலீஸ்வரர்
இஸ்கான் கோயில்
Call : +91-
விஷ்ணுமூர்த்தியை செங்கண்மால் என்று அழைப்பார்கள். விஷ்ணு பூஜித்த லிங்கம் என்பதால் இப்பெயர் கொண்டதாகக் கூறப்படுகின்றது. கோச்செங்கண்ணன் எனும் சோழ மன்னன் புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய கோயில் என்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுவதும் உண்டு. கோச்செங்கண்ணன் அவனது தாயின் வயிற்றில் இருக்கும்போது, குழந்தை சிறிது நேரம் தாமதித்துப் பிறப்பதே நல்லது என ஜோதிடர்கள் கூறியதால், அவனுடைய தாய் தனது கால்களை மேலே தூக்கி வைத்துக் கொண்டு தலைகீழாக நின்று, குழந்தை பிறக்கும் நேரத்தைத் தாமதப்படுத்தினாள். குழந்தை தாமதித்துப் பிறந்தது. ஆனால் தாய் இறந்து போனாள். இதனால் பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்தே இருந்தன. சிவந்த கண்களையுடையவன் என்பதால் கோச்செங்கண்ணன் எனப் பெயர் கொண்டதாகக் குறிப்பொன்று கூறுகின்றது. 1008 மலர்களைக் கொண்டு விஷ்ணு இவ்விறைவனைப் பூஜித்து வழிபடலானார். அதில் ஒரு மலரைத் தன்னையே மலராக அர்ப்பணித்துப் பூஜையை நிறைவு செய்தார் விஷ்ணு என ஸ்தல வரலாறு கூறுகின்றது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் செங்கண்மாலீஸ்வரர். கிழக்கு நோக்கிய சந்நிதி. பிரஹந்நாயகி அன்னை உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். தெற்கு நோக்கிய சந்நிதி. செல்வ விநாயகர், பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.