அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் (நயினார் கோவில்)
God Name : நாகநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிஜப்பூர் சுல்தானின் சேனைத்தலைவனான முல்லா சாஹிப் என்பவரின் மகள் பேசும் சக்தியற்றவள். ஒரு நாள் தந்தையுடன் சென்றவள் இக்கோவிலருகே வரும்போது "அல்லா நயனார் ஆண்டவா" எனக் கூவினாள். இங்குள்ள லிங்கத்தைப் பார்த்ததும் தன்னுடைய ஊமைப் பெண் பேசியதில் மகிழ்ச்சியுற்ற முல்லா சாஹிப், லிங்கத்தைப் பார்த்து "நீரே அல்லா" எனக் கூறியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
வசிஷ்டரின் சாபத்தால் சண்டாளனான திரிசங்குவை வானுலகம் அனுப்ப முயற்சித்த விஸ்வாமித்ரரின் அழைப்பிற்கு இணங்காத முனிவர்களை, வேடுவர்களாக மாற சபித்து விட்டார் விஸ்வாமித்ரர். அவ்வாறு வேடர்களாக மாறிய முனிவர்கள் இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றனர்.
இவ்விறைவன் அந்தணர் வடிவம் கொண்டு, அந்த முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். ஆதிசேஷன் இத்தலத்தில் தவம் மேற்கொண்டு முறைப்படி பூஜித்து வந்தான். இவ்விறைவன் நல்லுபதேசம் செய்தார். இதை கண்ணுற்ற அஷ்டமா நாகங்கள் இவ்விறைவனை வழிபட்டு அவர்களும் நல்லுபதேசம் பெற்றனர்.
மூலவர்: நாகநாதர், அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நாகநாத சுவாமி. சுயம்பு லிங்க மூர்த்தம். தீண்டாத் திருமேனி. நாமதேவர் எனும் பக்தரின் பாடலைக் கேட்க, மேற்கு முகமாக திரும்பிக் கொண்டு திரும்புலிங்கம் எனப் பெயர்பெற்றதாகக் கூறுவர்.
பின்புறமுள்ள மருத மரத்தடியில் நாகநாதர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பக்தர்கள் இங்குள்ள புற்றில் முட்டைகளைச் சமர்ப்பித்து பிரார்த்திக்கின்றனர்.
மகா மண்டபத்திலுள்ள சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அம்பாள் சௌந்தரநாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சந்நிதி அருகேயுள்ள சுரங்கப் பகுதியில் நீரோடை உள்ளது. இதுவே மங்கள தீர்த்தம். இதன் நீரை உட்கொண்டால் நோய்கள் அகலும் என நம்பப்படுகிறது.
விநாயகர், சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, அய்யனார், திரௌபதி, திரௌபதி அம்மன், பிடாரி அம்மன் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். பஞ்சலோகத்தில் உருவான உற்சவ விக்ரகங்கள் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.