அருள்மிகு நவகிரகக் கோவில் - நவபாஷாணம்
God Name : நவகிரகங்கள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
கடல் நீரில் நிலை கொண்டுள்ள ஒன்பது கிரகங்களை நவபாஷாணம் என்பர். இவை சிற்பியால் வடிக்கப்படாத சிலாரூபங்கள். இப்போதும் சமுத்திரத்தில் ஒன்பது கற்களைக் காணலாம். ஸ்ரீ ராமபிரானால் ஸ்தாபனம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட நவகிரகங்கள் இவை. கரையிலிருந்து ஒரு பாலம் கடல் பகுதிக்குச் செல்கின்றது. வலப்புற இறக்கத்தில் படியிறங்கி கடலில் நீராடுவது முதல் சடங்கு. பின்னர் இடப்புறமாக உள்ள நவகிரகங்களை வலம் வந்து பூஜிப்பது இரண்டாம் சடங்கு. வலம் வர ஏதுவாக படிகள், சுற்று கைப்பிடிகள் உள்ளன. நீர் மட்டம் இடுப்பளவே இருப்பதால் வலம் வருவதில் சிரமம் இருக்காது. காலை நேரமே பிரதட்சிணம் செய்யவும், பூஜை செய்யவும் உகந்த நேரம். மதியம் 12 மணிக்கு மேல் கிரகங்கள் கடலில் மூழ்கிவிடுவதால் கடல் மட்டத்திற்கு மேல் ஒன்றும் தெரியாது. நவகிரகக் கற்களை கடல் நீர் அரித்து மொக்கையாக்கியிருப்பதால், நமக்கு ஒவ்வொரு கிரகமாக அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கும். காலம் காலமாக பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள் நமக்கு அடையாளம் காண்பிப்பார்கள். இலங்கைக்கு பாலம் அமைக்கும் முன், தேவிப்பட்டினத்திலுள்ள காளியை ஸ்ரீ ராமர் பூஜை செய்து நவகிரகங்களை பிரதிஷ்டை செய்தார் என்பது ஸ்தல வரலாறு.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.