அருள்மிகு ஆதி ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவில் (திருப்புல்லாணி)

God Name : ஆதி ஜெகந்நாதப் பெருமாள், ஸ்ரீ தர்ப்ப சயன ராமர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஸ்தல வரலாறு இத்தலத்திலுள்ள பிரம்மாண்டமான அரச மரத்தின் கீழ் அமர்ந்து நீண்ட தவம் செய்து கொண்டிருந்தார் புல்லர் எனும் மகரிஷி. தவத்தினால் மகிழ்ந்த மஹாவிஷ்ணு பஞ்சாயுதங்கள் கொண்ட சதுர்புஜங்களுடனும் தேவியர்களுடனும் பிரத்யட்சமானார். புல்லர் மகரிஷி வேண்டிக் கொண்டதற்கிணங்க, அதே கோலத்தில் இங்கு சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றார். இவரே ஆதி ஜெகந்நாதர். இந்த பெருமாளிடமிருந்த அழகிய வில்லைப் பெற வேண்டி ஸ்ரீ ராமர் இவரை பூஜித்து வழிபட்டார். தன் அவதார நாயகனான ராமனுக்கு ஆசி வழங்கும் விதமாக வில்லைக் கொடுத்தருளினார் என ஸ்தல புராணம். இதனால் இவர் பெரிய பெருமாள் எனப்படுகிறார். கடலில் அணை கட்டி கடந்து செல்ல தீர்மானித்த ராமர் சமுத்ரராஜனின் அநுமதி பெற வேண்டினார். தர்ப்பைப் புல் படுக்கை ஒன்றினில் சயனித்திருந்தார். அவனை பிரார்த்தித்தார். சமுத்ரராஜன் வருவதில் தாமதம் ஏற்பட்டது. வீர சயனத்திலிருந்து கோபமாக எழுந்து அக்னி அஸ்திரத்தை விட்டு கடலை வற்றச் செய்ய முனையும்போது, ஓடோடி வந்த சமுத்ரராஜன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். சீதையை மீட்ட பிறகு, அயோத்தி திரும்பும் வழியில், ஏற்கனவே கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்ற இத்தலத்தில் இறங்கி பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தசரத ராமா என்னைக் காப்பாற்று என்று விபீஷணன் சரணாகதி அடைந்த ஸ்தலம் என்பதால் பெருமாளிடம் சரணாகதி அடைவோர் இத்தலத்தை தேர்ந்தெடுக்கின்றனர். தேவலர் எனும் முனிவரால் சபிக்கப்பட்ட ஏழு கன்னியர்களும் ஸ்ரீ ராமரை துதித்து தரிசித்து சாப நிவர்த்தி அடைந்தனர். கண்வ மகரிஷி, காலவ மகரிஷி ஆகியோர் இங்கு தவமிருந்து ஸ்ரீ ராமரை தரிசித்து பெரும் பேறு பெற்றனர். இங்குள்ள அரசமரத்தடியில் நாகப் பிரதிஷ்டைகள் செய்து, பாயசம் நிவேதித்து தோஷங்களை போக்கிக் கொள்கின்றனர். சக்கர தீர்த்தத்தில் நீராடுவது புண்யமானது. மாலி, சுமாலி, மால்யவான் ஆகிய அசுரர்களை வதம் செய்து பின்னர் சக்கரத்திற்கு அபிஷேகம் செய்ததால் சக்கர தீர்த்தம் என்பார்கள். இதில் நீராடி அஸ்வத்த மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிடைக்கும் என ஐதீகம்.
மூலவர்கள்: ஆதி ஜெகந்நாதப் பெருமாள், ஸ்ரீ தர்ப்ப சயன ராமர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் உற்சவர்கள்: கல்யாண ஜெகந்நாதர், ஸ்ரீ கோதண்டராமர் விமானம்: கல்யாண விமானம், ஸ்வஸ்திக விமானம், புஷ்பக விமானம் தாயார்: ஸ்ரீ பத்மாஸினித் தாயார், ஸ்ரீ கல்யாணவல்லித் தாயார் மூலஸ்தானத்தில் பிரதான மூலவரான ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பூமி தேவியும், நீளாதேவியும் உடன் அமர்ந்துள்ளனர். உற்சவரான கல்யாண ஜெகந்நாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு தேவியர்களுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். புல்லர் மகரிஷிக்கும் அஸ்வத்த நாராயணருக்கும் பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம். வலச்சுற்றில் ஸ்ரீ நரசிம்மரையும், விஷ்வக்சேனரையும் சேவிக்கலாம். பிரதான மூலஸ்தானத்திற்கு வடக்கே உள்ள சந்நிதியில் இரண்டாம் மூலவராக ஸ்ரீ தர்ப்ப சயன ராமர் தர்ப்பைப் புல் படுக்கையில் வீர சயனக் கோலத்தில் சயனித்து சேவை சாதிக்கின்றார். பொதுவாக சயனக் கோலப் பெருமாளின் கண்பார்வை மேல் நோக்கியே இருக்கும். ஆனால் இங்கு நம்மையே பார்க்கின்றார். தான் கூப்பிட்டு சமுத்ரராஜன் வராததை காண்பிக்கும் வகையில் கண்களில் கோபம் தெரிகின்றது. அதை தணிக்க சீதாப் பிராட்டியின் விக்ரகம் வைத்துள்ளதாக கூறுகின்றனர். இடுப்பில் பட்டாக்கத்தியை வைத்துள்ளார். திருமுடிக்கருகே கருடனும், மார்க்கண்டேயனும் காணப்படுகின்றனர். திருவடிகளருகே சுகன், சாரணன் மற்றும் ப்ருகு முனிவர், ஹனுமன் ஆகியோரைக் காணலாம். நாபிக்கமலத்திலிருந்து மேல் நோக்கி செல்லும் மூன்று தண்டுகளில் பிரம்மன், சூரிய-சந்திரர்கள், மது-கைடபர்கள், மஹாலட்சுமி மற்றும் தேவர்களை சேவிக்கலாம். அழகிய புடைப்பு சிற்பங்கள். அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விபீஷணனும், மனைவியுடன் சமுத்ரராஜனும் காணப்படுகின்றனர். இந்த சந்நிதியில் உற்சவ மூர்த்தங்களான ஸ்ரீ கோதண்டராமர், லக்ஷ்மணனுடனும் சீதா தேவியுடனும் சேவை சாதிக்கின்றார். விநய ஆஞ்சநேயரும் உடன் உள்ளார். அனைத்து விக்ரகங்களும் பேரெழில் கொண்டவை. இந்த சந்நிதிக்கு முன் பக்கமுள்ள சந்நிதியில் மூன்றாம் மூலவராக பட்டாபிஷேக ராமர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இளைய பெருமாளும் சீதா பிராட்டியும் உடன் உள்ளனர். சந்தானகோபாலனின் அழகிய திருவுருவம் மனதிலேயே நிற்கின்றது. பித்ருக்களை திருப்திப்படுத்தவும் புத்ர பாக்கியம் வேண்டியும் தசரத சக்ரவர்த்தி பிரதிஷ்டை செய்த விக்ரகமே இந்த சந்தான கோபாலன். இவரை வழிபட்டு பின் நாகப் பிரதிஷ்டை செய்து பிரார்த்தித்துக் கொண்டால் குழந்தைப்பேறு நிச்சயம் என்பர். பத்மாஸினித் தாயார் மூலவராக தனி சந்நிதி கொண்டுள்ளார். உற்சவர் கல்யாணவல்லித் தாயார் உடன் உள்ளார். பத்மாஸினித் தாயாரிடம் பிரார்த்தித்துக் கொண்டு குங்கும அர்ச்சனை மற்றும் பாயச நைவேத்யம் செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.