அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் (ஆதி சேது)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
விவரங்கள் இல்லை
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, உபய நாச்சியார்கள் இல்லாமல் ஏகாந்த ஸ்ரீநிவாசனாக சேவை சாதிக்கின்றார். திருப்பதி பெருமாளை நினைவுபடுத்துகிறார்.
எதிரே இரண்டு கருடன் சிலைகள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம். பின்புறமாக விநாயகரும் அகஸ்தியரும் எழுந்தருளியுள்ளனர்.
மஹாமண்டபத்தின் வடக்கு சுவரில் வெள்ளை பளிங்கு கல்லால் உருவான ஸ்வேத மாதவர் தரிசனம் தருகின்றார். ராஜ லக்ஷணத்துடன் காணப்படுகிறார். திருக்கரங்களில் சங்கு - சக்கரம் இடம் மாறியுள்ளன. இடக்கையிலுள்ள சக்கரத்தின் மீது லட்சுமி நரசிம்மரும் வலக்கையிலுள்ள சங்கின் மீது லட்சுமி நாராயணரும் வடிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராமதூத ஜெயவீர ஹனுமன் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். மிகுந்த வரப்ரசாதி.
திருப்பதி சீநிவாசரின் கல்யாணத்திற்காக தனது கமண்டலத்தில் இந்த சமுத்ர ஜலத்தை பிடித்துக் போக அகஸ்தியர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீ ராமரின் பாதம் பதிந்த பூமி.
விபீஷணன், வருணன் மற்றும் வாருணி ஆகியோர் சரணாகதி அடைந்த ஸ்தலம்.
வைஷ்ணவர்கள் கொண்டாடும் ஸ்நானக் கட்டம் உள்ளது. இங்கு சமுத்ர ஸ்நானம் செய்வது புண்ணியம். மகா சங்கல்பம் செய்து கொண்டு சேதுவில் நீராடிவிட்டு கரையிலுள்ள மணலை ஒரு கைப்பிடி எடுத்து கடல் நீரில் கரைத்துவிட்டு பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
ராமேன யாத்ரா ரேகா தனுஷாக்ஷரா சாகரே
முக்தி தத் தர்சனதேவ ந ஜானே ஸ்நானம் பலம்
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.