அருள்மிகு அச்சாளீஸ்வரர் திருக்கோவில் (தும்பகோடு)

God Name : அச்சாளீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

தருமபுரி

Call : +91-

ஏழைப் பெண் ஒருத்தி, தனக்குத் தெரிந்த பெண்மணியிடம் கடனாகப் பணம் பெற்று தனது சாப்பாட்டுத் தேவைகளைக் கவனித்துக் கொண்டாள். தனது இயலாமை காரணமாகக் கடனைத் திருப்பித் தர முடியவில்லை. எனவே, கடனே வாங்கவில்லை எனப் பொய்யுரைத்தாள். கடன் கொடுத்தவள், வாங்கியவளை அச்சாளீஸ்வரர் முன்பாக வந்து சத்தியம் செய்யும்படி அழைத்தாள். அச்சாளீஸ்வரர் முன்பாக வந்து நின்ற ஏழைப் பெண், தனது வறுமை நிலையினை எடுத்துக்கூறிப் புலம்பி, தன்னை மன்னிக்குமாறு வேண்டி சத்தியம் செய்தாள். பொய் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு சலனமே இல்லாமல் காணப்பட்ட கடன் கொடுத்தவள், "இடி விழட்டும்" எனச் சபித்தாள். சிறிது நாட்கள் கழித்துப் பெய்த பெருமழையின்போது, பெரிய இடி ஒன்று கோவில் மீது விழுந்து விமானத்தைப் பழுதடையச் செய்ததோடு மட்டுமல்லாமல், சிவலிங்கத்தையும் பிளவுபடுத்தியது. பிளவுபட்ட லிங்கத்தைக் குளத்தில் இறக்கிவிட்டு, புதிய சிவலிங்கம் ஒன்றை நிறுவினர். ஆனால், அன்றிரவே புதிய லிங்கம் குளத்திற்கும், குளத்திலிருக்கும் பிளவுபட்ட லிங்கம் கருவறைக்கும் மாறின. இறைவனின் விருப்பம் இதுவெனக் கருதி, அவ்வாறே பூஜை செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மூலவரான அச்சாளீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அவரது திருமேனியில் பெரிய பிளவு ஒன்று காணப்படுகிறது. அக்னி திசையில் நாகபட்சி தேவதையை தரிசிக்கலாம். இங்கு பாம்பு புற்று ஒன்று தானாகவே தோன்றி வளர்ந்து வருகிறது. விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். புதிய சிவலிங்கத்தை திருக்குளத்தில் தரிசிக்கலாம். இங்குள்ள நாகராஜருக்கு வளையல் காணிக்கைகளை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.