அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (மருங்கூர்)
God Name : மூலவர்: சுப்ரமண்யஸ்வாமி் உற்சவர்: ஆறுமுகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
தருமபுரி
Call : +91-
தேவர்கள் யாகம் செய்யும்போது ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக, ஆட்டுக்கடா ஒன்று தோன்றி அனைவரையும் துன்புறுத்தியது. அதனை அடக்கிய முருகன் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தாணுமாலயன் - கன்னியாகுமரி திருமணத்தைத் தடுக்கும் வகையில், சேவல் வடிவம் கொண்டு "கொக்கரொக்கோ" எனக் கூவினார். திருமணம் தடைபட்டது. பின்னர் முருகன் இங்கு கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிறு குன்றின் மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயம் இது. பாறைகளில் செதுக்கப்பட்ட 120 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். தென் பாண்டி அரசர்களின் குலதெய்வமான முருகனுக்கு, பாண்டிய நாட்டின் தெற்கே உள்ள கடைசி முருகன் கோவில் இது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள சுப்ரமண்யஸ்வாமி மிகுந்த வரப்பிரசாதி. 'மருங்கூர் திருமலை அமரர் பதி காத்த சுப்ரமண்யஸ்வாமி' எனப் போற்றுவார்கள். ஐம்பொன்னால் செய்து பொருத்தப்பட்ட கரங்கள்.
வள்ளி, தெய்வயானை உடனாய ஆறுமுகர் உற்சவ மூர்த்தமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஆட்டுக்கடா வாகனமாக இருக்கின்றது.
அன்னை ஈஸ்வரி, விநாயகர், பூதத்தான், காசி விஸ்வநாதர், வீரபாகு, வீர மகேந்திரர், சரஸ்வதி தேவி ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.