அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் (மேலச்செவல்)
God Name : மூலவராக நவநீத கிருஷ்ணன், உற்சவராக நவநீத கிருஷ்ணன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
அந்நாளில் திருவனந்தபுர சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்து வந்த கோவில். இவ்வூரில் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதர்கள் வாழ்ந்து வந்ததால் சதுர்வேதி எனப் பெயர் கொண்டது. இவ்வூரைச் சேர்ந்த வெள்ளிமலைக் கவிராயர் என்பவர் திருச்செந்தூர் கோவில் மடைப்பள்ளியில் தொண்டு செய்து வந்தார். முருகப்பெருமானின் அலங்காரத்தில் மெய்மறந்து நின்றதால், நைவேத்தியம் தயார் செய்ய மறந்து விட்டார். இதனால் கோவில் தர்மகர்த்தா அவரை வேலையை விட்டு விரட்டி விட்டார். வேலையை இழந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் கடலில் விழப்போனவரை, முருகன் தடுத்து மேலச்செவலில் வாழ்ந்த கிருஷ்ண சாஸ்திரிகளை சென்று பார்க்க சொன்னார். சாஸ்திரிகளின் கனவில் தோன்றிய முருகன் கவிராயருக்கு உதவுமாறு கூறினார். சாஸ்திரியிடம், வடமொழியில் இருந்த திருச்செந்தூர் புராணத்தை எளிய தமிழில் மொழி பெயர்த்தார் வெள்ளிமலைக் கவிராயர். கோவில் தர்மகர்த்தாவும் மற்றவர்களும் கவிராயரை ஏளனம் செய்து அவரிடமிருந்த ஓலைச்சுவடிகளை பிடுங்கி கடலில் எறிந்தனர். கடலில் வீசப்பட்ட ஓலைச்சுவடிகள் இலங்கையிலுள்ள மனைமுறி எனுமிடத்தில் ஒதுங்கின. அங்கு குளித்துக் கொண்டிருந்த முருக பக்தர் ஒருவருக்கு கிடைத்தன. அவற்றை அவர் தனது பூஜை அறையில் வைத்து பூஜித்து நித்ய பாராயணம் செய்து வந்தார். திருச்செந்தூர் புராணம் தமிழில் உருவாக காரணமாயிருந்தது மேலச்செவல் கிராமமே என ஸ்தல வரலாறு விவரிக்கின்றது.
மூலஸ்தானத்தில் மூலவராக நவநீத கிருஷ்ணன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். குழந்தை வடிவம். சாளக்ராம மூர்த்தம். இரண்டு கரங்களிலும் வெண்ணெய் வைத்துள்ளார். உற்சவ மூர்த்தமான நவநீத கிருஷ்ணனின் பஞ்சலோக விக்ரகம் பேரெழிலுடன் காணப்படுகிறது. தனது இரண்டு கைகளிலும் வெண்ணெய் வைத்துள்ளார். திருடிய வெண்ணெய் கரங்களில் இருப்பதால், யசோதையிடம் பிடிபடாமல் இருக்க வலது காலை சற்று முன்னே வைத்து ஓடத் தயாராகும் நிலையில் காட்சி தருகிறார். அர்த்த மண்டபம், மஹா மண்டபம், மணி மண்டபம் ஆகிய மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களின் கூரையில் ராமாயண - மஹாபாரத - தசாவதார சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. 800 வருடங்கள் பழமையான கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.