அருள்மிகு சுந்தர மஹாலிங்கம் - சந்தன மஹாலிங்கம் திருக்கோவில் (சதுரகிரி)

God Name : சுந்தர மஹாலிங்கம் மற்றும் சந்தன மஹாலிங்கம்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கோவை

Call : +91-

தாணிப்பாறை மலையடிவாரத்தில் அமர்ந்துள்ள ஆசிர்வாத விநாயகரிடம் ஆசி பெற்று மலை ஏற ஆரம்பிக்கின்றனர். அடுத்து பக்தர்கள் தரிசிப்பது ராஜ காளியம்மன். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பேச்சியம்மனையும், கருப்பசாமியையும் தரிசிக்கலாம். மலையின் தென் பகுதியை கருப்பசாமி காப்பதாக ஐதீகம். பின்னர் 7 கி.மீ. நடந்து மலை ஏற வேண்டும். நுழைவாயிலில் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளை தரிசிக்கலாம். 100 மீட்டர் தள்ளியுள்ள பிரதான சந்நிதியில் சுந்தர மஹாலிங்கம் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். சுயம்பு லிங்கம். இங்கு ஆனந்தவல்லி அம்மன் அரூபமாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறாள். நவராத்திரி சமயத்தில் உற்சவ விக்ரஹத்தை தரிசிக்கலாம். விஜய தசமியன்று மஹிஷாசூரமர்த்தினி ரூபத்தில் காட்சி தருகின்றாள். சுந்தர மஹாலிங்கம் கோவிலை காலை 6 மணிக்கு திறந்து பூஜை ஆரம்பித்து விடுவார்கள். அர்த்த ஜாம பூஜையை மாலை 6 மணிக்குள் நடத்தி பின்னர் நடையை சாத்தி விடுவார்கள். அமாவாசை தினங்களில் பகல் 1 மணிக்கு சுந்தர மஹாலிங்கத்திற்கு மஹா அபிஷேகம் செய்வார்கள். தேனும் தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும். இங்கு எழுந்தருளியுள்ள வன துர்க்கை அம்மன் சுந்தர மஹாலிங்க கோவிலை காப்பதாகவும், பிலவாடி கருப்பசாமி சதுரகிரி மலையை காப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறை, அத்தியூத்து எனப்படும் அத்தி மரக் காடுகள் ஆகியவற்றைக் கடந்து, காமதேனுவின் குளம்புகள் பட்ட காராம்பசுத் தடம் பார்த்து, கோரக்கர் குகையை தரிசித்து பின்னர் இரண்டு குகைகளை இரண்டு சந்நிதிகளாகக் கொண்ட இரட்டை லிங்கங்களை தரிசிக்கலாம். சங்கரலிங்கம் என்றும் கூறுவார்கள். மலை ஏறிக் கொண்டிருக்கையில் அடுத்தடுத்து காணப்படும் வெள்ளை கணபதி, நடுக்காட்டுக் கணபதி, நாக கன்னி காவு, தவசி குகை கணபதி, பெரிய மஹாலிங்கம் ஆகிய திருவுருவங்களைக் கண்டு ஆனந்திக்கலாம். இயல்பான வேகத்தில் நடந்தால் சதுரகிரியின் உச்சியை அடைய 6 மணி நேரம் செலவாகலாம். ஆனால் வழியில் நாம் தரிசிக்கும் அனேக மூர்த்திகளினால் நிறைய நேரம் செலவாகலாம்் எனினும், நமக்கு பல கோடி புண்ணியம் கிடைக்கும். மலையுச்சியிலுள்ள பிரதான சந்நிதியில் சந்தன மஹாலிங்கத்தை காணும் பெரும் பாக்யம் கிட்டுகிறது. உமையன்னை பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம். தேவலிங்க வகை எனக் கூறுவர். இங்கு பிள்ளையார், முருகன், நவகிரகங்கள், சந்தன மஹாதேவி (சக்தி), 18 சித்தர்கள் ஆகிய சந்நிதிகளில் உள்ள மூர்த்திகளை தரிசிக்கலாம். சந்தன மஹாலிங்கம் கோவிலை விடியற்காலை 3 மணிக்கே திறந்து பூஜிப்பார்கள். அர்த்த ஜாம பூஜையை மாலை 6 மணிக்குள் செய்து நடையை சாத்தி விடுவார்கள். இங்கிருக்கும் ஆகாச கங்கை தீர்த்தம் கொண்டு சந்தன மஹாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். சந்தன மஹாலிங்கத்தை ஆராதிக்கும் பூசாரி இன்றளவும் பிரம்மசாரியாகவே இருந்து வருகிறார். சட்டைமுனியின் குகை, கல்லால மரம் ஆகியன காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.