அருள்மிகு நீர்காத்த அய்யனார் திருக்கோவில் (ராஜபாளையம்)
God Name : நீர்காத்த அய்யனார்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கோவை
Call : +91-
மதுரை மீனாட்சி கோவிலைச் சேர்ந்த சின்ன ஓடக்காரனும், பெரிய ஓடக்காரனும், கோவிலுக்குக் கொடிமரம் செய்வதற்காகத் தகுந்த மரம் தேடி இப்பகுதிக்கு வந்தனர். இவ்வனத்திலுள்ள மரம் ஒன்றைத் தேர்வு செய்து வெட்ட ஆரம்பித்தனர். திடீரென மரத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கவே, பயந்து போய் வெட்டுவதை நிறுத்திவிட்டார்கள். அந்த மரத்தை வெட்டியதால் கோபம் கொண்டார் அய்யனார். செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்டவர்களிடம், மரத்தை மதுரையில் சேர்ப்பித்துவிட்டு வந்து இங்கு காவல் காக்குமாறு பணித்தார் அய்யனார். ஒரு படையெடுப்பை முடித்துத் திரும்பிய பாண்டிய வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். செய்வதறியாது திகைத்த வீரர்கள் அய்யனாரைப் பிரார்த்தித்தனர். திடீரென ஒரு மரம் முறிந்து விழுந்து அவர்களுக்குப் பாலமாக நின்று, ஆற்றைக் கடக்க உதவியது. அய்யனாரின் கருணைக்கு நன்றி தெரிவித்த வீரர்கள் நீர்காத்த அய்யனார் எனப் பெயரிட்டு வழிபடலாயினர் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள நீர்காத்த அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. சாந்த ஸ்வரூபியாகவும், அழகே உருவானவராகவும் காட்சி தருகின்றார். பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ தலைமலை ஸ்வாமி, ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சின்ன ஓடக்கார ஸ்வாமி, ஸ்ரீ பெரிய ஓடக்கார ஸ்வாமி, ஸ்ரீ வன காளியம்மன், ஸ்ரீ மாடன், ஸ்ரீ மாடத்தி, ஸ்ரீ ராக்காச்சி, ஸ்ரீ வனப்பேச்சியம்மன், ஸ்ரீ கருப்பஸ்வாமி, ஸ்ரீ தர்மராஜர், சப்த கன்னிகைகள் ஆகிய தேவதைகளைக் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.