அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் (திரிசூலம்)

God Name : ஸ்ரீ திரிசூலநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

படைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரம்மா, திலோத்தமையிடம் மோகம் கொண்டார். பிரம்மாவைத் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும் தேவகன்னிகையான திலோத்தமை, இந்த அடாத செயலைக் கண்டு ஓடத் தொடங்கினாள். துரத்திக் கொண்டு ஓடிய பிரம்மாவைச் சிவ கணங்கள் துரத்தின. தனது செயலுக்காக வெட்கப்பட்டு வருந்திய பிரம்மா, இத்தலத்தில் அமர்ந்து சிவபூஜைகளைச் செய்து, பிராயச்சித்தம் வேண்டினார். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை இவ்விறைவன் அழித்ததால் இவ்வூர் திருச்சுரம் எனப் பெயர் கொண்டது. சுரம் என்றால் மலைகள் எனப் பொருள். நாளடைவில் திருச்சுரம் என்பது மருவி திரிசூலம் என்றானதாகக் கூறுவர். "வானவன் மா தேவி சதுர்வேதி மங்கலம்", "திருநீற்று சோழ நல்லூர்" ஆகிய பெயர்கள் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக நிற்க அதன் நடுவே அமைந்த கோயில் இது.
மூலவர்: ஸ்ரீ திரிசூலநாதர், அம்பாள்: ஸ்ரீ திரிபுர சுந்தரி. முதலில் ஸ்ரீ நாக யக்ஞோபவீத கணபதியை தரிசித்து ஆசி பெற்று, பின்னர் ஆலயத்துள் செல்கின்றனர். மூலஸ்தானத்தின் மூலவரான ஸ்ரீ திரிசூலநாதர் தேஜோமயமாகக் காட்சி தரும் சிவலிங்க ஸ்வரூபம். ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். சூலபாணி எனப் போற்றுவர். கஜப்பிருஷ்ட விமான அமைப்பைக் கொண்டுள்ள மூலஸ்தானம். தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் திரிபுர சுந்தரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. வலது காதில் குண்டலம், இடது காதில் மகரகுழைக் காது, விரிசடையில் பிறை சந்திரன் இவற்றை தரித்து, வீராசனத்தில் தரிசனம் தரும் தட்சிணாமூர்த்தியின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வள்ளி-தேவசேனா உடனாய முருகப் பெருமான், செல்வமுத்துக்குமாரர், லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, ஸ்ரீநிவாசர், ஆதி சங்கரர் என எல்லா விக்ரஹங்களுமே மனசை விட்டு அகலாத வண்ணம் அழகான வேலைப்பாடுகள் கொண்டுள்ளன. முக மண்டப தூண் ஒன்றில் காட்சி தரும் சரப மூர்த்தி சாந்நித்யம் மிக்கது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.