அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (திருப்பரங்குன்றம்)

God Name : சுப்ரமண்ய ஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

ஸ்தல வரலாறு: சூரபத்மனை சம்ஹாரம் செய்து முடித்த பிறகு, இத்தலத்தில் வெற்றிவீரராக அமர்ந்திருந்தார் முருகப் பெருமான். தேவேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவரது மகளான தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட ஸ்தலம் இது. பிரம்மா திருமணம் செய்து வைக்க, சூரிய-சந்திரர்கள் ரத்ன தீபம் தாங்கி நிற்க, இந்திரன் தாரை வார்த்துக் கொடுக்க, பார்வதி-பரமேஸ்வரன் பரமானந்தத்தில் திளைக்க, தெய்வயானை-முருகன் திருமணம் இனிதே நடந்தேறிய ஸ்தலம். இந்த திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளி வாழ்த்தினர். குமரனுடைய திருமணத்திற்காக சிவபெருமான் உமையவளோடு எழுந்தருளி தேவர்களுக்கு காட்சியளித்த ஸ்தலம். பரமன் (சிவபெருமான்) எழுந்தருளிய குன்றம் என்பதால் பரங்குன்றம் எனப் பெயர் கொண்டது. குன்று சிவலிங்க வடிவில் இருப்பதால் கிரிவலம் வருகின்றனர். (கிரிவல தூரம் 3 கி.மீ.) சிவபூஜையை மறந்திருந்த நக்கீரர் பூதத்தால் சிறைபடுத்தப்பட்டு பாதாளத்தில் அடைபட்டுக் கிடந்தார். திருமுருகாற்றுப்படை பாடி, முருகனருள் பெற்று மீண்டார் என புராண வரலாறு கூறுகிறது. பிரம்மனும், தேவர்களும், முனிவர்களும் வழிபட்ட ஸ்தலம் இது. மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த பெருமான், தாமே சீடராய் இருந்து உபதேசம் கேட்டதாக கூறுவர்.
மலைக்கு முன்னால் கட்டப்பட்ட குடைவரைக் கோவில். மிகுந்த வேலைப்பாடுகளையும், அழகிய சிற்பங்களையும் தாங்கி நிற்கும் 20 அடி உயர தூண்களைக் கொண்ட அழகிய முன் மண்டபம். தெய்வயானையின் திருமணக் காட்சிகள் செதுக்கப்பட்ட தூண்கள். அடுத்துள்ள பெரிய மண்டபம் கடந்து, படிக்கட்டுக்கள் ஏறி மகா மண்டபத்தை அடையலாம். இது மலையோடு இணைத்துக் கட்டப்பட்ட மண்டபம். அடுத்து அர்த்த மண்டபத்தைக் காணலாம். கருவறையின் பெரிய பாறையின் மத்தியில் மகிஷாசூரமர்த்தினி திருவுருவமும், கீழ் பாகத்தில் மூலவராக முருகப் பெருமானின் கல்யாணக் கோலமும், மேற் பாகத்தில் கற்பக விநாயகரையும் செதுக்கியுள்ளனர். கருவறையில் வாயிலை நோக்கியவாறு மூலவரான சுப்ரமண்ய ஸ்வாமி, இடதுகால் மடித்து வலது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். தெய்வயானை தேவியும் உடன் உள்ளார். அறுபடை வீடுகளில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருவது இங்கு மட்டும்தான். யானை, ஆடு ஆகிய வாகனங்கள். திருமண சடங்கினில் கலந்து கொண்டு வாழ்த்தும் தெய்வங்கள் சூழக் காணப்படும் முருகன், உயரமான மேடை ஒன்றில் தரிசனம் தருகின்றார். மூலவர் சந்நிதியில் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. குடைவரை மூர்த்தி என்பதனால் புனுகு சாத்துகின்றனர். உற்சவராக ஷண்முகரும் தெய்வயானையும் தரிசனம் தருகின்றனர். அருகேயுள்ள சந்நிதியில் திருமால் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். வலப்புறமாக உள்ள குகை சுவரில் ஹிரண்ய சம்ஹாரம் மற்றும் வராஹ அவதாரம் பற்றிய சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகரும், விஷ்ணு துர்க்கையும் காட்சி தருகின்றனர். இடதுபுறமாக உள்ள குகையில் அன்னை அன்னபூரணி பரிவாரங்களோடு எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தில் சிவலிங்க வடிவினராக தரிசனம் தருகின்றார் பரங்கிரிநாதர். பின்னால் சோமாஸ்கந்தரின் அழகிய திருவுருவம் காணலாம். அம்பாள் பெயர் ஆவுடைநாயகி. குடைவரைக் கோவில் என்பதனால் பிரகாரம் கிடையாது. வெள்ளை நிற மயிலைக் காணலாம். இது ஒரு தேவாரத் திருத்தலம். அறுபடை வீடுகளுள் இது முதல் படைவீடு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.