அருள்மிகு திருமறைநாதஸ்வாமி திருக்கோவில், திருவாதவூர்
God Name : திருமறைநாத ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
நான்கு வேதங்களையும் அசுரர்கள் கவர்ந்து சென்றபோது, விஷ்ணுமூர்த்தி இத்தலத்தில் நீர் வடிவாக நின்று இவ்விறைவனை வழிபட்டார் என்றும், தாமரை மலரின் நடுவே வேத வடிவாகத் தோன்றி சிவபெருமான் காட்சி தந்தார் என்றும், இதனால் 'வேத நாயகர்' - 'திருமறைநாதர்' என்ற பெயரைக் கொண்டார் என்றும் புராண வரலாறு கூறுகிறது.
ஹனுமனின் தந்தையான வாயு வழிபட்டதால் 'திருவாயுவூர்' எனப் பெயருற்று, நாளடைவில் மருவி 'திருவாதவூர்' என்றானது. வாத நோயினால் அவதிப்படுபவர்கள் இவ்விறைவனைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால் குணமடைவர். இதனால் 'வாதவூர்' என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
நல்ல எண்ணெயும் பச்சைக் கற்பூரமும் கலந்து, மூலவருக்குத் தைலாபிஷேகம் செய்து, அந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் வாதப் பிடிப்பு, தீராத மூட்டுவலி ஆகியன நீங்கும்.
மாண்டவ்ய முனிவரின் சாபத்தைப் பெற்று கால் முடமாகிப் போன சனீஸ்வரன் இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இங்கு சனீஸ்வரன் ஒரு காலை மடக்கி வைத்து உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறார். முடக்குவாதம் நீங்க இவரை வழிபடுகின்றனர்.
பிரம்மாவின் ஆரணகேத யாகம் குறைவின்றி நடக்க அம்பிகை ஆசிர்வதித்தாள். இதனால் 'ஆரணவல்லி' என்ற பெயரையும் கொண்டாள்.
அசுரர்களுக்கு அடைக்கலம் தந்த பிருகு முனிவரின் மனைவி, அவர்களை திருமாலிடம் ஒப்படைக்க மறுத்ததால், முனிவரின் மனைவியின் சிரசை தனது சக்ராயுதத்தால் திருமால் துண்டித்தார். இதனால் சாபம் பெற்று, இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
கபில முனிவரின் வீரஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஸ்தலம் இது. முதல் யுகத்தில் ஆதித்தனும், இரண்டாம் யுகத்தில் சந்திரனும், மூன்றாம் யுகத்தில் அக்னியும், நான்காம் யுகத்தில் வரதராஜனும் வழிபட்ட ஸ்தலம் இது.
மாணிக்கவாசகரும், கபிலரும் பிறந்த ஸ்தலம் இது.
பிரம்ம தீர்த்தம், சிவ தீர்த்தம், அக்னி தீர்த்தம், பைரவர் தீர்த்தம், வாயு தீர்த்தம், கபில தீர்த்தம் ஆகிய ஏழு வகையான தீர்த்தங்கள் இங்கு உள்ளன.
சங்காபிஷேகம் செய்யும் முறை இங்குதான் தோன்றியது என்கிறார் சோமசுந்தர பட்டர்.
கோவிலுக்கு முன்னால் உள்ள பெரிய ஏரிக்கு 'விஷ்ணு தீர்த்தம்' எனப் பெயர். இதன் மதகில் உள்ள சட்டத்தில் புருஷா மிருகம் சிலை ஒன்றைக் காணலாம். ஏரியைத் தூய்மைப்படுத்தவும், ஊரைக் காக்கவும் இருக்கும் சிலை இது.
நூறு தேங்காய்களையும் வேறு சில பொருட்களையும் சுட்டெரித்துக் கருப்பாக்கிப் பொடி செய்து, புருஷா மிருகத்தின் மீது பூசி அதைக் கருப்பாக்கினால், பெய்யாத மழையும் பெய்யும் என ஐதீகம். சிவராத்திரியன்று அதற்குத் திருவிழா நடைபெறுகிறது.
மூலவர்: திருமறைநாத சுவாமி் அம்பாள்: திருமறை நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திருமறைநாத சுவாமி. சுயம்பு லிங்க வடிவினர்.
'சுயம்பிரகாச தேஜோமய லிங்கம்' எனப் போற்றுவர். 'வேதபுரீஸ்வரர்', 'வாதபுரீஸ்வரர்' ஆகிய திருநாமங்களும் உண்டு.
கிழக்கு பார்த்த சந்நிதி.
வழக்கமாக சுவாமிக்கு இடப்பக்கத்தில் அம்பாள் சந்நிதி அமைந்திருப்பது போல் அல்லாமல், இங்கு வலப்பக்கத்தில் அமைந்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும் என்கின்றனர். அம்பாள் திருமறை நாயகி, 'வேதநாயகி' என்றும் அழைக்கப்படுகிறார், மிகுந்த வரப்பிரசாதி. இவருக்கு 'ஆரணவல்லி' என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி.
கபில விநாயகர், துவார விநாயகர், அநுக்ஞை விநாயகர், காளீசர் தட்சிணாமூர்த்தி, சூரியன், சுப்ரமண்யர், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வாகனம் இல்லாத பைரவர் வித்தியாசமாகக் காட்சி அளிக்கின்றார்.
வெளிப் பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில், அற்புதமான கொடுங்கைகளுடன் கூடிய நூற்றுக்கால் மண்டபம் ஒன்று உள்ளது. இதை 'சிலம்பொலி கேட்ட மண்டபம்' என்பார்கள். சிவகாமி உடனாய நடராஜர் எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீ நடராஜர் அருவமாய் இருந்து நடனம் புரிய, அவரது கால் சிலம்பொலி மாணிக்கவாசகருக்கு மட்டும் கேட்டது.
மாணிக்கவாசகருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.
சனீஸ்வரர் இங்கு தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். கரங்களில் தண்டம், சூலம் ஏந்தி, காகத்தின் மீது கால் வைத்தபடி காட்சி தருகிறார்.
தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.