அருள்மிகு ஆதி வ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் (நங்கநல்லூர்)
God Name : ஸ்ரீ ஆதி வ்யாதிஹர பக்த ஆஞ்சநேய ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஞானரூபியாய் விஸ்வரூப தரிசனம் தரும் ஆஞ்சநேயரை, விடியற்காலை 4.30 மணிக்கு, நிர்மால்ய தரிசனத்தில் சேவிக்கலாம். கோ பூஜை, நித்ய ஆயுஷ் ஹோமம், வேத பாராயணம் அனைத்தும் சிறப்புற நடக்கின்றன.
அபிஷேக ஆராதனைகளை - கோசாலையின் பசும்பாலைக் கொண்டும், அஷ்டாங்க திரவியங்களைக் கொண்டும், லிப்ட் சிஸ்டத்தின் உதவியோடு செய்கின்றனர். பல்லாயிரக் கணக்கான மொறு மொறு மிளகு வடைகளை மாலையாகக் கோத்து, கழுத்திலிருந்து பாதம் வரை அணிவிக்கின்றனர்.
சடாரி சாத்தும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
பல விதமான நைவேத்யங்கள் செய்து சமர்ப்பித்து, திருப்பதியில் விநியோகிப்பதைப் போலவே, இங்கும் காலை முதல் இரவு வரை சேவார்த்திகளுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கின்றனர்.
இங்கு உண்டியல் வைக்கப்படவில்லை. காணிக்கைகள் கோவிலுக்கே போய்ச் சேரும்.
பிரதான நுழைவாசலும், பிரதான சந்நிதியும் மேற்கு நோக்கி உள்ளது. 90 அடி உயரம் கொண்ட கருவறை.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆதி வ்யாதிஹர பக்த ஆஞ்சநேய ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். 32 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான ஆஜானுபாகு திருமேனி கொண்டுள்ளார். கூப்பிய கரங்களுடன், சாந்தஸ்வரூபியாக சேவை சாதிக்கின்றார். பீடத்தின் அடியில் பஞ்சமுக ஆஞ்சநேய யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வடமேற்கு மூலையிலுள்ள சந்நிதியில் - ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி, ஹனுமன் ஆகியோர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றனர். தென்மேற்கு மூலையிலுள்ள சந்நிதியில் ருக்மணி-சத்யபாமா சகிதம் ஸ்ரீ கிருஷ்ணர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணரை எதிர் நோக்கி ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் தருகின்றார். உச்சிஷ்ட கணபதி மற்றும் நாகர் சந்நிதிகள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.