அருள்மிகு கணவாய் கருப்பண்ணசுவாமி கோவில் (மேலக்கால்)

God Name : மலையாண்டி அய்யனார்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

பிரதான கருவறையில் மூலவராக மலையாண்டி அய்யனார் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். கிழக்கு பார்த்த சந்நிதி. முன் மண்டபத்தில் பிள்ளையார், முருகன், துவார பாலகர்கள், க்ஷேத்ர பாலகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெரிய கருப்பண்ணசாமி, சின்ன கருப்பண்ணசாமி, அகோர வீரபத்ரர், அக்னி வீரபத்ரர், கன்னிமார், மாயாண்டி, லாட சந்யாசி, பாம்பாட்டி சித்தர் ஆகியோரின் மண் சிலைகளை காணலாம். வெளியே உள்ள கருவறையில் சோனை, சப்பாணி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். பிரகாரத்தில் அநேக கிராம தேவதைகளை தரிசிக்கலாம். வெளியே முகப்பில் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தரும் கணவாய் கருப்பண்ணசாமி சுற்று வட்டார கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். தலைப்பாகை அணிந்தும், கையில் அரிவாள் கொண்டும், பிரம்மாண்டமான குதிரையில் அமர்ந்தும் கம்பீரமாக தரிசனம் தருகிறார். வலப் பக்கமாக இருக்கும் குதிரையில் மலையாண்டி அய்யனார் அமர்ந்துள்ளார். புரவி எடுப்புத் திருவிழா சிறப்பாக நடத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.