அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் (வீரபாண்டி)
God Name : ஸ்ரீ கண்ணீஸ்வரமுடையார்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
ஸ்தல வரலாறு:
மதுரையை ஆண்ட வீரபாண்டி எனும் அரசனின் பெயரால் இவ்வூர் வீரபாண்டி எனப்படுகிறது. அரசன் வீரபாண்டி கண் பார்வையை இழந்து கஷ்டப்பட்டான். அவனது கனவில் தோன்றிய இறைவன் கூறியபடி, இத்தலத்திற்கு வந்து கௌமாரியை வேண்டி ஒரு கண்ணின் பார்வையைப் பெறுகிறான்.
கௌமாரி அன்னையின் வழிகாட்டுதலின்படி சிவபெருமானை வேண்ட, மற்றொரு கண்ணின் பார்வையையும் பெறுகிறான். அதற்கு நன்றிக்கடனாக சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு கண்ணீஸ்வரமுடையார் எனப் பெயரிட்டு இவ்வாலயத்தை நிர்மாணித்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
வடக்கே முல்லையாறு, கிழக்கிலும் - தெற்கிலும் பசுமையான வயல்கள் என இயற்கை சூழலில் அமைந்துள்ள கோவில் இது. கோவிலின் முன்பாக நாகலிங்க மரமும், மனோரஞ்சிதப் பூ மரமும் உள்ளன.
மூலவர்: ஸ்ரீ கண்ணீஸ்வரமுடையார். அம்பாள்: ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி.
ஆலயத்துள் நுழைந்ததும் காணப்படும் வாது வென்ற விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று சிவனாரைக் காண மூலஸ்தானத்திற்குச் செல்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கண்ணீஸ்வரமுடையார். இடப்புறமாக தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி.
கோஷ்டத்து தெய்வங்களும், பிரகாரத்து பரிவாரத் தேவதைகளும் அழகாக இருக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.