அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோவில் (ரெங்கமலை)

God Name : மல்லீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: புத்ர பாக்யம் வேண்டி நின்ற பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான், இந்த மலையை ஏறுவதற்கு படிக்கட்டுக்கள் அமைக்கும்படி பணித்தார். பணியாட்களுக்கு ஊதியம் தரும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லையே என வருந்திய பக்தனிடம், இம்மலையில் கிடைக்கும் விராலி எனும் மூலிகை சாற்றினை செப்புக்காசு மீது பிழிந்தால் தங்கமாகும் என அசரீரியாக ஒலித்துக் கூறப்பட்டது. இம்மலையில் கிடைக்கும் விராலி மூலிகையைக் கொண்டு தினம் ஒரு தங்கக்காசு செய்து அதிலிருந்து பெறும் பணத்தைக் கொண்டு படிக்கட்டுக்களை கட்டலானார் பக்தர். இதை தெரிந்து கொண்ட பக்தனின் மனைவி, தனக்கும் ஒரு பொற்காசை தினமும் தர வேண்டும் என பிடிவாதம் பிடித்தாள். அவள் பேச்சைக் கேட்டு இரண்டாம் காசை தங்கமாக்க முற்பட்டதில், செப்புக்காசு தங்கமாக மாறவில்லை. படிக்கட்டு வேலையும் பாதியில் நின்றுவிட்டது. மனைவியின் பேராசையினால் தவறு செய்தமைக்காக வருந்திய பக்தன், ஊர் மக்களிடம் பணம் வசூலித்து பணியை நிறைவு செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் காராம்பசுவின் மடியிலிருந்து தினமும் பால் காணாமல் போவது கண்டு, பின் தொடர்ந்து சென்ற மேய்ப்பாளர், யாரோ பாலை குடிக்கிறார்கள் என நினைத்து குடிப்பவரின் கழுத்தைப் பிடித்தார். கழுத்தைப் பிடித்ததால் பாறைகளைப் பிளந்து கொண்டு உள்ளே புதைய ஆரம்பித்தார். பாகம் மீதி வெளியே நின்றதால் கைப்பிடி அளவே உள்ள லிங்கமாக இருக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அவரே மல்லீஸ்வரர். ஒருவர் நுழையும் இடைவெளி உள்ள நுழைஞ்சாம்பாறை, ஆனால் உள்ளே ஏழு பேர் நிற்க இடவசதி உள்ளது. முழங்கால் அளவு தண்ணீர் காணப்படுகிறது. மலை மீதுள்ள இந்த தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொள்கின்றனர்.
நாலாயிரம் அடி உயரம் கொண்ட மலை. ஏறிச் செல்ல படிகள் இருக்கின்றன. சஞ்ஜீவி மலையின் ஒரு பகுதி என்பார்கள். மலையடிவாரத்திலுள்ள ஸ்ரீ விநாயகரை வணங்கி ஆசி பெற்று, நாகம்மன் புற்றையும் தரிசித்து வழிபட்டு பின் மலை ஏறத் தொடங்கினால், அரை கி.மீ. ஏறியதும் யானை விழுந்தான் பள்ளம் வரும். அடுத்து வரும் கிண்ணாரக்கல் பாறையைத் தட்டினால் ஜலதரங்க இசையைக் கேட்கலாம். தோரணக்கல் மற்றும் பல குகைகள், சுனைகள் என அடிவாரத்திலிருந்து 3 கி.மீ. பயணித்தால் மல்லீஸ்வரர் கோவிலை அடையலாம். மலை மீதுள்ள கோவிலின் கருவறையில் சுயம்பு லிங்க மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார் மல்லீஸ்வரர். கைப்பிடி அளவே உள்ள சிவலிங்கம் எனினும் சாந்நித்யம் மிக்கவர். சிவலிங்கம் மேற்கு பார்த்தும், நந்தியம் பெருமான் கிழக்கு பார்த்தும் காணப்படுகின்றனர். பிள்ளையார், நாகர் சிலைகள், கன்னிமார், கருப்பண்ணசாமி, பைரவர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.