அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் (தாராபுரம்)
God Name : அகத்தீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
ஸ்தல வரலாறு: முன்நாளில் பராந்தகபுரம், இராஜபுரம், விராடபுரம் என்றெல்லாம் பெயர்கள் கொண்டு விளங்கிய தாராபுரம், சரித்திரப் புகழ் பெற்ற ஸ்தலமாகும். முன்பு ஒரு காலத்தில், பார்வதி தேவியின் திருமண நாளில், பிரம்மா, திருமால், முப்பத்தி முக்கோடி தேவர்கள் யாவரும் மேரு மலையில் ஒன்று கூடினார்கள். பாரம் ஏறியதால் மேரு மலையின் வடதிசை இறங்கியது. இதனால் தென்திசை மேல் எழுந்தது. பூமியை சமநிலை ஆக்கும் எண்ணத்தில், சிவபெருமான் அகஸ்தியரை தென் பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தார். அகஸ்தியரும் பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நாடான தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில் தங்கினார். தான் தங்கும் ஊர்களில் தினமும் ஆத்மார்த்த பூஜையை நடத்தி வரும் பழக்கம் கொண்டவர் அகஸ்தியர். தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை சீடர்கள் காசியில் இருந்து கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டுவிட்டதால், அமராவதி ஆற்றங்கரையில் சிவ பூஜையை முடிக்க, தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலைப் பிடித்து வைத்து லிங்க வடிவம் அமைத்து பூஜித்தார். எனவே இவ்விறைவன் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் வலது பக்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலின் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரரை மனம் உருகி பிரார்த்தனை செய்தால், திருமணத் தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும்.
மூலஸ்தானத்தில் அகத்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அகிலாண்டேஸ்வரி அன்னை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். காசி விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் மற்றும் அழகிய முருகன் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. மகா மண்டபத் தூண்களில் புருஷா மிருகம், கண்ணப்பன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின்போது இங்கு சில காலம் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. சிவாலயத்தை ஒட்டி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.