அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருக்கோவில், நங்கநல்லூர்

God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பரசுராமரின் தந்தையான ஜமதக்னி இத்தலத்தில் யாகம் ஒன்றை செய்தபோது, உக்ர நரசிம்மராக பிரத்யட்சமான பெருமாளிடம், சாந்த நரசிம்மராக சேவை சாதித்தால், சேவார்த்திகளும் தரிசிக்கலாம் எனக் கூறியதால், அதன்படியே இங்கு எழுந்தருளியுள்ளார் என ஸ்தல வரலாறு. முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் இத்தலத்தில் யாகம் செய்துள்ளதாக குறிப்பொன்று கூறுகின்றது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ ரங்கநாதர் தெற்கிலும், ஸ்ரீ கிருஷ்ணர் வடக்கிலும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். ஸ்ரீநிவாசப் பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், கோதண்டராமர், ஆண்டாள், ஆழ்வாராதிகள் ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். தேர் வடிவிலுள்ள சந்நிதி ஒன்றில் சக்கரத்தாழ்வார் பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்களோடு தரிசனம் தருகின்றார். பின்புறமாக பஞ்ச நாகத்தின் மேல் யோக ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். தன்வந்திரியை சேவிக்கலாம். சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு முன்பாக உள்ள பிரார்த்தனை சக்கரம் மிகுந்த சாந்நித்யம் கொண்டது. பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது என்பர். இதைத் தொட்டு வணங்கினால் நினைத்த காரியம் நடைபெறும். தை மாசம் மூன்றாம் வெள்ளிக் கிழமை நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில், திருமாங்கல்ய சரடை தாயார் - பெருமாள் மீது சாத்தி பூஜித்த பின்னர் கோவிலுக்கு வரும் சுமங்கலிகளுக்கு விநியோகம் செய்கின்றனர். பானகம், தயிர்சாதம் நைவேத்யம் செய்து பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.