அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

கோட்டைமேடு என்றழைக்கப்படும் கோட்டையை முற்றுகையிட்டு ஆங்கிலேயர்களும், அவர்களுடன் போரிட்ட திப்பு சுல்தான் படைகளும், உதவிக்கு வந்த மைசூர் படைகளும் மோதிக் கொண்டிருந்தன. (1768 - 1791) கோட்டையைச் சுற்றி கூடாரங்களமைத்து போர்வீரர்கள் தங்கினார்கள். மைசூரிலிருந்து வந்த படைக்கலன்களுடன் லிங்க வடிவிலான அம்மன் உருவம் ஒன்றும் கலந்து வந்துவிட்டது. போர் முடிந்து படைக்கலன்களுடன் இதையும் எடுத்துச் சென்ற மைசூர் படையினர், மைசூருக்குச் சென்று பார்த்தபோது இந்த உருவம் மாயமாய் மறைந்துவிட்டது. மீண்டும் இங்கே வந்து பார்த்ததில் இந்த வடிவம் இங்கேயே நிலை கொண்டது தெரிய வந்தது. எவ்வளவோ முயன்றும் அதை பெயர்த்து எடுத்துச் செல்ல முடியவில்லை. பின்னாளில், படைவீரன் ஒருவனது கனவில் தோன்றிய மாரி, தான் வேப்பமரக்கிளைகளிடையே இருப்பதாகத் தெரியப்படுத்தினாள். மறுநாள் மாரி குறிப்பிட்ட இடத்திற்குத் தேடி வந்த படைவீரன், நீர்ச்சுனை அருகேயுள்ள வேப்ப மரக்கிளைகளிடையே மாரியம்மன் இருப்பதைக் கண்டு, அதை எடுத்து வந்து ஊர்மக்கள் உதவியுடன் பிரதிஷ்டை செய்து கோவிலெழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. படைக்கலனுக்கு 'தண்டு' என்று பெயர். படைக்கலன்களோடு வந்த சேர்ந்த திருவுருவம் என்பதால் 'தண்டு மாரியம்மன்' என்று பெயர் பெற்றது.
மூலஸ்தானத்தில் மூலவராக தண்டு மாரியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். துர்கா தேவியின் அம்சமாக விளங்கும் இவள் மிகுந்த வரப்பிரசாதி. மூலஸ்தான விமானத்தில் சமயபுர மாரியம்மன், காமாட்சி, காசி விசாலாட்சி, கருமாரி, தனலட்சுமி, சரஸ்வதி, அயன மாரியம்மன், காயத்ரி, கௌமாரி ஆகியோர் சுதை சிற்பங்களாகக் கொலுவுற்றுள்ளனர். பஞ்சமி, பைரவி, பர்வத புத்திரி, மங்கள ரூபிணி, மதியணி, சூலினி, சங்கரி, சௌந்தரி, ஜெய ஜெய கௌரி ஆகிய வடிவங்களை தரிசித்த பலனும், மன நிறைவும் இவள் ஒருவளை தரிசித்ததிலேயே கிடைக்கின்றது. வலச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, தாமரையில் அமர்ந்த லட்சுமி, துர்க்கை, வேலேந்திய முருகன் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் அஷ்டலட்சுமியின் திருவுருவங்களைக் காணலாம். நுழைவாசலில் மகிஷாசூரமர்த்தினி, கஜலட்சுமி, சரஸ்வதி ஆகிய திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. கிழக்குப் பகுதியில் ராஜ கணபதி மற்றும் துர்க்கையை தரிசிக்கலாம். அரசமரத்தடியில் விநாயகரையும், சற்றுத் தள்ளி நவகிரகங்களையும் தரிசிக்கலாம். வடகிழக்கு பகுதியில் கருப்பராயன், முனியப்பன் ஆகிய கிராமிய தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.