அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (பொள்ளாச்சி)

God Name : சுப்ரமண்யஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பொள்ளாச்சி வாரச்சந்தை பிரசித்தி பெற்றது. பல ஊர்களிலிருந்தும் கூடும் வியாபாரிகள், தங்களது பொருட்களை வாங்க - விற்க புழக்கத்திலிடுவதால், 'பொருள் ஆட்சி' எனப் பெயருற்று, நாளடைவில் மருவி 'பொள்ளாச்சி' என்றானது. (வெல்லம், இரும்பு, கால்நடைகள் அதிகம் கிடைக்கும்)
மூலஸ்தானத்தில் மூலவராக சுப்ரமண்யஸ்வாமி எழுந்தருளியுள்ளார். ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட அழகிய திருமேனி. வலத்தோளில் வேல் சார்த்தப்பட்டுள்ளது. மேற்கரங்களில் வஜ்ஜிரம், சூலம் கொண்டும், கீழ்க்கரங்கள் அபய-வரத முத்திரைகள் கொண்டும் காட்சி தருகிறார். ப்ருஹத்சம்ஹிதையில் கூறியுள்ளபடி மூலவரை அமைத்துள்ளனர். வலப்புறமாக வள்ளியும் இடப்புறமாக தெய்வயானையும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். மயிலின் தலை இடப்புறமாக திரும்பி உள்ளதால் தேவமயில் என்பர். திருவாசி, மயில், முருகன் ஆகிய அனைத்தும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டவை. திருச்சுற்றில் பிள்ளையார், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஐயப்பன் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். மேல் விதானத்தில் 12 ராசிகளின் சிற்பங்கள், யாளியின் வாயில் மூன்று வளையங்கள் கோத்த கற்சங்கிலிகள், திருமண மண்டபத் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் அற்புதமான வேலைப்பாடுகளை உடையவை. பொள்ளாச்சியின் தெற்கே 7 கி.மீ. தொலைவில் ஆளியாற்றின் கரையில் பிரசண்ட கணபதி (ப்ரச்சண்ட) எழுந்தருளியுள்ளார். மிகுந்த வரப்பிரசாதி. மிகப் பழமையான கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.