அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் (பீர்க்கன்கரணை)

God Name : காரணீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் காரணீஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் காருண்யாம்பிகை எழுந்தருளி அருள் புரிகின்றாள். நுழைவாசலருகே வரசித்தி விநாயகர், கோஷ்டத்தில் நர்த்தன கணேசர், வலச்சுற்றில் சுமுக கணேசர் என மூன்று பிள்ளையார்களின் ஆசியைப் பெறலாம். மூலவரின் கோமுகமருகே கனகதுர்க்கையையும், வலச்சுற்றின் முடிவில் ஹனுமனையும் சேவிக்கலாம். வள்ளி - தெய்வயானை உடனாய முருகனை ஸ்வாமி கோஷ்டத்திலும், மஹாலட்சுமியை அம்பாளின் கோஷ்டத்திலும் தரிசிக்கலாம். ஸ்வர்ணாம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், சரபேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் தனித்தனி சந்நிதிகளில் கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள கால பைரவர் அனுக்ரஹ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். ஜாதக தோஷங்களை நீக்க வல்லவராக போற்றப்படுகின்றார். அரசு/வேம்பு இணைந்த விருட்சத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டைகளும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.