அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் (மாடம்பாக்கம்)

God Name : தேனுபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

கபில முனிவர் பசு வடிவில் தினமும் சிவலிங்கத்தின் மீது பாலைப் பொழிந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். இந்த பசு தினமும் பாலை வீணாக்குகிறது என்ற ஐயத்தில், பசுக்களை மேய்ப்பவன் தடியால் அடித்து தண்டிக்க முற்பட்டான். உடனே பசு, கபில முனிவராக மாறி, சிவலிங்கத்தை தொழுதபடி நின்றது. இதைக் கண்டு ஆச்சர்யமுற்ற பசு மேய்ப்பவன், நடந்தவற்றை மன்னனிடம் தெரிவிக்கின்றான். பின்னர் இக்கோவிலை மன்னர் நிர்மாணித்ததாக ஸ்தல வரலாறு. தேனு என்றால் கறவைப்பசு எனப் பொருள். பசு பொழிந்த பாலில் நீராடிய சுயம்பு லிங்கம் என்பதால் தேனுபுரீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். கபில மகரிஷி முக்தி பெற்ற ஸ்தலம்.
மூலவர்: தேனுபுரீஸ்வரர், அம்பாள்: தேனுகாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் தேனுபுரீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். கஜ ப்ருஷ்ட விமான அமைப்புடன் அமைந்துள்ள கிழக்கு பார்த்த சந்நிதி. வலச்சுற்றில் வலஞ்சுழி விநாயகர், ந்ருத்ய கணபதி, மஹா கணபதி, முருகப் பெருமான் மற்றும் சிவாலய கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு பின்னால் ஸ்ரீ தேவி - பூ தேவி சஹித வரதராஜப் பெருமாள், காசி விஸ்வநாதர், அன்னபூரணி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் தேனுகாம்பாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். கருணாகடாக்ஷி என்றொரு திருநாமமும் உண்டு. விதானத்தில் நவாக்ஷரி யந்திரமும், கீழே அஷ்டதலமும் அமைத்துள்ளனர். சாமுத்ரிகா லட்சணத்துடன் விளங்கும் அன்னை தேனுகாம்பாள் மிகுந்த வரப்ரசாதி. இங்குள்ள தூண் ஒன்றில் எழுந்தருளியுள்ள சாந்த சரபேஸ்வரர் மிகுந்த வரப்ரசாதி. திருமணத்தடை நீக்குதல், புத்ர பாக்யம் அருளுதல் போன்ற வரங்களை அளிப்பதாக பக்தர்கள் சந்தோஷப்படுகின்றனர். நவக்ரகங்களில் புதன் - பொதுவாக கிழக்கு நோக்கி இடம் பெற்றிருப்பார். இங்கு வித்தியாசமாக வடக்கு நோக்கி இருப்பதால், புத பகவானின் வக்கிர/நீச தோஷங்கள் நிவர்த்தி ஆவதாக அர்ச்சகர் தெரிவித்தார். பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.