அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில் (திருவொற்றியூர்)

God Name : மூலவர்: படம்பக்கநாதர், ஆதிபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

மாந்தாதான் எனும் அயோத்தியை ஆளும் அரசன், அனைத்து ஊர்களும் வரி கட்டவேண்டும் என ஆணை பிறப்பித்தான். அந்த ஓலையைக் கொண்டு வந்தவன், இவ்வூர் எல்லையை மிதிக்கும்போது, அவனுக்கே தெரியாமல், ஓலைச்சுவடி ஏட்டில் உள்ள வரி பிளந்து, 'திருவொற்றியூர் நீங்கலாக' என திருத்தி அமைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்தியதால் இறைவனை எழுத்தறியும் பெருமான் எனப் போற்றுவர். மதுரையை எரித்த கண்ணகி, அதே சீற்றத்துடன் இங்கு வந்தாள். சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த தியாகர், சொக்கட்டான் காயை அருகிலுள்ள கிணற்றில் விழும்படி உருட்டினார். அதை எடுப்பதற்காக கண்ணகி கிணற்றினுள் இறங்கினாள். உடனே வட்டப்பாறையைக் கொண்டு கிணற்றினை மூடிவிட்டார் தியாகராஜர். (இதன் மீதுதான் வட்டப்பாறை நாச்சியார் சந்நிதி உள்ளது). கலிய நாயனார் திருப்பணியைத் தொடர பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால், தனது தலையை வெட்டிக்கொள்ள முற்பட்டார். சங்கிலி நாச்சியாரை மணக்க ஆசைப்பட்ட சுந்தரர், திருவொற்றியூரில், தியாகேசரையே தூது போகும்படி வேண்டுகிறார். ஏற்கனவே சுந்தரரின் திருமணத்தை வெண்ணைநல்லூரில் தடுத்து நிறுத்திய இறைவன், இம்முறை சுந்தரருக்கு உதவ வேண்டி சங்கிலியாரிடம் தூது போனார். ஆரூரில் ஒருத்தி இருக்க (பறவை நாச்சியார்), திருவொற்றியூரில் இருக்கும் நான் எப்படி மணப்பேன்? என்று சிவனாரிடம் சங்கிலிநாச்சியார் வினவினாள். 'உன்னை விட்டு பிரிய மாட்டேன்' என்று சத்தியம் வாங்கிக் கொள் என்று யோசனை கூறுகிறார் சிவனார். இந்த விபரங்களை அறிந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரிலேயே தங்கி விட்டால், பறவை நாச்சியாரின் கதி என்ன ஆவது? - தவிர திருவாரூர் தியாகேசனைப் பார்க்க முடியாமல் போய் விடுமே என்றெல்லாம் எண்ணி, இறைவன் லிங்கத் திருமேனியிலிருந்து விடுபட்டு, மகிழ மரத்தடி சென்று விட வேண்டும் என்றும், சத்தியம் செய்து முடித்ததும் மீண்டும் சந்நிதிக்கே திரும்பலாம் என்றும் கோரிக்கை விடுக்கிறார். இந்த சம்பாஷணையை சங்கிலி நாச்சியாரிடம் ஒப்பித்து விட்டார் சிவபெருமான். மறுநாள், மணம் புரிய சென்ற சுந்தரரை, மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் செய்யும்படி கூறிய சங்கிலி நாச்சியார், அதன்படி மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் வாங்கிக் கொண்டார். சிவபெருமானும் பிரத்யட்சமாகி அவர்களை வாழ்த்தினார். மகிழ மரத்தடியில் திருவொற்றீசனின் திருவடிகளை தரிசிக்கலாம். இந்த நிகழ்ச்சியை மகிழடி உற்சவம் என்று ஐதீகமாக கொண்டாடுகின்றனர். மாசி மாசத்தில் நடக்கிறது. தேவாரத்திருத்தலம், சக்தி பீடங்களுள் ஒன்று.
மூலவர்: படம்பக்கநாதர், அம்பாள்: வடிவுடையம்மன். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் படம்பக்கநாதர். உயரமான பாணம் கொண்டு தரிசனம் தருகின்றார். ஆவுடை இல்லை. சுயம்பு லிங்க ஸ்வரூபம். தீண்டாத் திருமேனி. கஜப்பிருஷ்ட விமானம் கொண்ட மூலஸ்தானம். கிழக்கு பார்த்த சந்நிதி. ஒற்றீசர், வன்மீகநாதர், புற்றிடங் கொண்டார், ஆதிபுரீஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் கொண்டவர். கார்த்திகை பௌர்ணமியன்று ஆரம்பித்து மூன்று தினங்களுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலம் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். இந்த நாட்களில் மட்டும் ஸ்வாமியை கவசமில்லாமல் தரிசிக்கலாம் எனக் கூறுகின்றனர். இறைவன் தமது திருவுருவத்துடன் வாசுகியையும் சேர்த்துக் கொண்டதால் படம்பக்கநாதர் எனவும், புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதால் புற்றிடங் கொண்டார் எனவும் பெயர் கொண்டார். ஸ்வாமி சந்நிதிக்கு தென்புறம் அமைந்துள்ள கொலு மண்டபத்தில் தியாகராஜர் சந்நிதி கொண்டுள்ளார். மான் - மழு ஏந்திய மேற்கரங்களும், அபய, சிம்ம, கர்ண முத்திரைகள் கொண்ட கீழ்கரங்களும் கொண்டு சுகாசனத்தில் தரிசனம் தருகின்றார். இடப்புறமாக உமா தேவியார் அமர்ந்திருக்க, நடுவே துள்ளிக் குதித்து ஆடும் நிலையில் முருகன். காணக் கண் கொள்ளா காட்சி. ஏலேல சிங்கருக்கு மாணிக்கங்களைக் கொடுத்ததால் மாணிக்க தியாகர் எனப் பெயர் கொண்டார். 18 வகை நடனங்களை ஆடிக் காட்டி - ஆடும் தியாகர் எனப் பெயர் கொண்டவர். கார்த்திகை மாசத்தின் 3ம் நாள் சங்காபிஷேகம். அருகேயுள்ள தனி மேடையில் பிரியா விடை அம்மன் காட்சி தருகின்றாள். தியாகராஜர் சந்நிதிக்குள் அநேக லிங்கங்கள். ஆதிபுரீஸ்வரர் சந்நிதியும் உள்ளது. தியாகராஜருக்கு நேர் எதிரே குணாலய ஹேரம்ப கணபதி. நடராஜர் சந்நிதியின் வடக்கு கோஷ்டத்தில் ஏகபாத மூர்த்தி - திரிபாத மூர்த்தியின் வடிவங்கள் உள்ளன. சிவரூபத்தில் - வலது புறம் விஷ்ணு, இடது புறம் பிரம்மா, நடுவே சிவன் - ஒரே வடிவமாக இருப்பதை ஏகபாத மூர்த்தி என்பர். கோஷ்டத்தின் நடுவே சூரசூளாமணி பைரவர் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஞானசக்தியாக எழுந்தருளி இருக்கும் வடிவுடையம்மன், பெயருக்கேற்ப அழகே உருவான திருவுருவமாக தரிசனம் தருகின்றாள். சக்தி பீடங்களுள் இக்ஷூ பீடமாக திகழ்கிறது. இவள் கல்விக்கு அதிபதியாக விளங்கி ஞானத்தை தருகின்றாள். ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அஷ்டாங்க விமானம் கொண்ட கருவறையில், ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியும், சதுர் புஜங்களும் கொண்டு, நின்ற திருக்கோலத்தில், கழுத்தை சற்று வளைத்த நிலையில் தரிசனம் தருகின்றாள் வடிவுடையம்மன். இவளுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து பலாப்பழ நைவைத்யம் செய்வது சிறப்பு. உச்சிக்கால தரிசனமே சிறந்தது என்பர். சப்த மாதர்களின் நடுவே காளி உருவில் காட்சி தரும் சாமுண்டீஸ்வரி தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆதிசங்கரரால் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வட்டப்பாறை அம்மன் எனப் போற்றுகின்றனர். குழந்தை ஜகன்நாதர், நால்வர், சுந்தரர், சங்கிலி நாச்சியார், சஹஸ்ர லிங்கம், ஆகாச லிங்கம், அமிர்தகடேஸ்வரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நளலிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களைக் காணலாம். வன்னி மரத்தருகே காளத்தீஸ்வரரை தரிசிக்கலாம். அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களுக்குரிய நட்சத்திர லிங்கங்களை தரிசிக்கலாம். ஏகாதச ருத்ரர்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.