அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

வேதபுரீஸ்வரரும் - பாலாம்பிகையும் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் தலத்தில், அசுரர்களால் அல்லல்பட்ட முனிவர்கள் வந்து, தாங்கள் படும் கஷ்டங்களை எடுத்துக்கூறினர். ஈசன் இத்தலத்தை விடுத்துச் சென்றார். தனது உடம்பில் பூசியிருந்த திருநீற்றை எடுத்து உமையவளிடம் கொடுத்து, இங்கேயே இருந்து சிவனாகவும்-சக்தியாகவும் செயல்பட்டு பக்தர்களைக் காப்பாய் என ஆசி வழங்கினார். தாம் கோவில் கொள்ள உரிய இடம் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு, அகஸ்தியரிடம் பணித்தாள் தேவி. இந்த வேற்காடு ஸ்தலமே சிறந்ததென இங்கு சப்தமாதாக்களாக எழுந்தருளினாள் என வரலாறு. புற்று உருவில் முதலில் தன்னை வெளிப்படுத்தி, பின்னர் சிரம் மட்டும் காட்டி, நாகத்தைத் தலையில் அணிந்து, உடலை நாகப்புற்றினுள் மறைத்தாள் தேவி. புற்றிலிருந்தவள் ஆலயத்தில் எழுந்தருள, ஒரு தைப்பூச நன்நாளில் திரிசூலம் எடுத்து பூமியில் ஊன்றி, தனித்தன்மையுடன் உறைந்தாள். கோவிலுக்குள் சிலா ரூபத்தில் ஆட்சி புரியத் தொடங்கியதும், புற்று இடம் மாறியது. அன்னை அதில் கருநாக வடிவில் இருப்பதாக ஐதீகம். 1936ஆம் ஆண்டு அன்னையின் சிலா விக்ரஹம் - தான்ய வாசம், ஜல வாசம், ஸ்வர்ண வாசம் புரிந்து, 1943ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில், சூரியனின் பொற்கிரணங்கள், அன்னையின் திருமேனி மீது படர்ந்து, அபிஷேகம் செய்கின்றன. சூரியன் தனக்குரிய ஞாயிற்றுக்கிழமை தினத்தை, அன்னைக்கு உகந்த நாளாக வைத்துக்கொள்ளும்படி வேண்டினான். அகஸ்தியர் ஆடி ஞாயிறுகளில் அன்னையைப் பூஜித்தார். இதனால் இத்தலத்தில் அன்னையை ஞாயிற்றுக்கிழமையன்று தரிசிப்பது சிறந்தது என்பர். சக்தி ஸ்தலங்களுள் ஒன்று.
மூலஸ்தானத்தில் தேவி கருமாரி அன்னை, அக்னி ரூபமாக கரிய நிறத்துடனும், உடல் மறைத்து சிரம் காட்டிய ஒரு வடிவமாகவும், ஞானஒளி வடிவுடன் சதுர்புஜங்கள் கொண்டு அழகான திருவுருவமாக மற்றொரு வடிவமாகவும், மேற்கரங்களில் நாகம் சுற்றிய உடுக்கை, திரிசூலம், கீழ்க்கரங்களில் கத்தி, பொற்கிண்ணம் இவைகளை ஏந்தி காட்சி தருகின்றாள். ஜ்வாலா அக்னி கிரீடமும், ஐந்து தலை நாகக்குடையும் சிரசை அலங்கரிக்கின்றன. ஜகன்மாதா கருணை பொழிவதாலும், கருநாக வடிவில் உறைவதாலும், கருவுற்ற பெண்களைக் காப்பதாலும் கருமாரி எனப் போற்றப்படுகிறாள். அரசு - வேம்பு இணைந்த விருட்சத்தின் கீழ் வலம்புரி விநாயகர், நாகர்கள், அங்காள பரமேஸ்வரி, உச்சிஷ்ட கணபதி, ப்ரத்யங்கிரா தேவி, மீனாட்சி, காமாட்சி மற்றும் விசாலாட்சி திருவுருவங்களைத் தரிசிக்கலாம். கொடிமரத்து விநாயகர், நவகிரகங்கள், ஸ்ரீ தேவி பூ தேவி சமேத ஸ்ரீநிவாசர், ராமர், லக்ஷ்மணர், சீதா பிராட்டி, ஹனுமன், சாவித்ரி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். மரச்சிலை அம்மன் வரப்பிரசாதி. வள்ளி-தெய்வயானை உடனாய ஆறுமுகரின் திருவுருவம் கண்ணாடி மண்டபத்தில் அழகாக இருக்கின்றது. அந்தரகண்ணி, அங்கயற்கண்ணி, பிரம்மணகண்ணி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, கருமாரி ஆகிய சப்த மாதர்களை வழிபடலாம். ஆதியில் அன்னை புற்றுருவாக இருந்த புற்றும், நாக பிரதிஷ்டைகளும் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.