அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் (பாரிமுனை)

God Name : கமடேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

முத்தியாலுப்பேட்டை அருகே இருந்த சென்னம்மன் குப்பத்து காளியே இன்று காளிகாம்பாள் என அழைக்கப்படுகிறாள். புராணங்களில் இவளை நெய்தல் நில காமாட்சி எனக் குறிப்பிட்டுள்ளனர். சென்னம்மன் என்று அழைக்கப்பட்ட இவளது பெயரிலேயே சென்னைப்பட்டினம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோயில் கொண்டிருந்தாள். அப்போது அவளை கோட்டையம்மன் என அழைத்து வந்தனர். ஆலய வழிபாட்டிற்கு இடையூறாக இருப்பதாக ஆங்கிலேயர்களிடம் முறையிட்டனர் மக்கள். அதனால் கோயில் இங்கு இடம் பெயர்ந்ததாகக் குறிப்பொன்று கூறுகிறது. 1677ஆம் வருடம் (3.10.1677) மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இவ்வாலயம் வந்து அன்னையை வழிபட்டுச் சென்றிருக்கிறார். இந்த காளியின் மீது யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடலை பாடியுள்ளார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ காளிகாம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். இடக்காலை மடக்கி, வலது பாதம் தாமரை மலர் மீது ஊன்றி, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். பாசம்-அங்குசம் கொண்ட மேற்கரங்கள், நீலோத்பல மலரும் வரத முத்திரையும் கொண்ட கீழ்க்கரங்கள் கொண்ட அற்புத திருவுருவம். திருவடியில் விஸ்வகர்மாவின் மகன் பிரம்மரிஷி விஸ்வரூபனின் (திரிசரன்) மூன்று தலைகள் செதுக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்து விமானத்தின் மேல் சூரிய-சந்திரர்களை பாம்பு பிடிப்பது போலவும், மீன்கள் நீந்துவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. சுற்று சுவரில் - பராசக்தி, ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய பஞ்ச சக்திகளின் திருவுருவங்களை தரிசிக்கலாம். அன்னைக்கு முன்புறமாக ஸ்ரீ சக்கர அர்த்தமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் பீஜாட்சர மந்திரங்கள் உள்ளன. ஆதி சங்கரர் ஸ்தாபித்த அர்த்தமேரு. பள்ளியறையில் காணப்படும் வெள்ளி ஊஞ்சலில் அன்னையின் அழகிய திருவுருவத்தைக் காணலாம். உற்சவ அம்மன் பெரியநாயகியின் திருவுருவம் அழகாக உள்ளது. இருபறமும் மஹாலட்சுமியும் சரஸ்வதியும் உள்ளனர். சிவலிங்க வடிவினராக கமடேஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் புரிகின்றார். தெற்கு மூலையில் சித்தி விநாயகரையும், வடமேற்கில் சித்தி-புத்தி விநாயகரையும் தரிசிக்கலாம். மாகாளி, அகோர வீரபத்ரர், வட கதிர்காம முருகன், விஸ்வபிரம்மா, காயத்ரி தேவி, நாகசுப்ரமண்யர், துர்க்கை ஆகியோர்க்கு சந்நிதிகள் உள்ளன. காயத்ரி மாதா சந்நிதி முன்பாக அமர்ந்து தியானம் செய்தல், காயத்ரி ஜபம் செய்தல் போன்ற நற்காரியங்களை செய்கின்றனர். கிழக்கு பார்த்த பிரதான வாசல் வழி நுழைந்ததும் நாம் தரிசிப்பது, சுதையாலான பிரத்யங்கிரா தேவியின் திருவுருவம். செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் பூஜிக்கப்பட்ட ரட்சை பெற்றுச் செல்ல பக்தர்கள் ஏராளமாக காத்திருப்பர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.