அருள்மிகு ஸ்ரீ சக்கர மஹா மேரு 18 சித்தர்கள் சக்தி பீடம் (மாடம்பாக்கம்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

வாஞ்சா கல்ப கணபதி ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், கனகதாரா ஹோமம், துர்க்கா சாந்தி ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவாரண பூஜை, சுவாசினி பூஜை, கோ பூஜை ஆகியன யாவும் பிரார்த்தனையின் பேரில் சிறப்பாக நடத்தி தருகின்றனர்.
ஆதி பீடத்தில் ஸ்ரீ சக்தி பீட கணபதியை வழிபட்டு ஆசி பெற்று ஆஸ்ரமத்திற்குள் போகின்றனர். நாகவல்லி-நாகலட்சுமி சஹித ஸ்ரீ நாகராஜன் - ராஹு பகவான் சந்நிதி, திருநாகேஸ்வரத்தில் உள்ளது போலவே இங்கும் இருக்கின்றது. சர்ப்ப தோஷங்கள் விலக இவரை பிரார்த்திக்கின்றனர். சூக்ஷ்ம மேடையில் சத்குருவின் பாதுகைகளை வணங்கலாம். அடுத்து அரூபலட்சுமி, ஜடாமுனீஸ்வரர், சூலினி துர்க்கை, சுந்தர கணபதி, வள்ளி தெய்வயானை சஹித சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களை வழிபடலாம். மூலஸ்தானத்தில் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி சிவ-சக்தி ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றாள். ஸ்ரீ சக்ர மஹா மேரு அமைத்துள்ளனர். வலச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, நால்வர், சித்த தேவதாவான ராஜ காளியம்மன், காமதேனு ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். குருவாயூரப்பன் சந்நிதியும் அதன் எதிரே துளசி மாடமும் நேர்த்தியாக அமைத்துள்ளனர். அடுத்து ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் சந்நிதியில் ஸ்வாமிகளின் திருவுருவத்தை தரிசிக்கலாம். தனித்தனி குடில்களில் 18 சித்தர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். 1. ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர், 2. ஸ்ரீ கயிலை கம்பளி சட்டை முனி சித்தர், 3. ஸ்ரீ மஹா போகர் சித்தர் 4. ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர், 5. ஸ்ரீ புலிப்பாணி சித்தர், 6. ஸ்ரீ சட்டை முனி சித்தர், 7. ஸ்ரீ அகப்பை சித்தர் 8. ஸ்ரீ அழுகுணி சித்தர், 9. ஸ்ரீ குதம்பை சித்தர், 10. ஸ்ரீ வள்ளலார் சித்தர், 11. ஸ்ரீ இடைக்காடர் சித்தர் 12. ஸ்ரீ பட்டினத்தடிகளார், 13. ஸ்ரீ கடுவெளி சித்தர், 14. ஸ்ரீ கஞ்சமலை சித்தர், 15. ஸ்ரீ சென்னிமலை சித்தர் 16. ஸ்ரீ கபிலர் சித்தர், 17. ஸ்ரீ கருவூரார் சித்தர், 18. ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.