அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் திருக்கோவில் (சைதாப்பேட்டை)

God Name : மூலவர்: பட்டாபிஷேக ராமர், பிரசன்ன வெங்கடேசர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சீதாப்பிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூல விக்ரஹங்களாகவும் உற்சவ விக்ரஹங்களாகவும் பட்டாபிஷேகக் கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். மூலவர் ராமருக்கு வலப்பக்கம் சீதை - கல்யாண கோலத்திலும், உற்சவ ராமருக்கு இடப்பக்கம் சீதை - பட்டாபிஷேகக் கோலத்திலும் காட்சி தருகின்றனர். ஆஞ்சநேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வேங்கடவனாகவும் நரசிம்மனாகவும் காட்சி தரும் அபூர்வ சிலா விக்ரகம் என்பதால் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச நரசிம்மர் என்று போற்றப்படுகிறார். சங்கு-சக்கரமும், அபய-வரத ஹஸ்தங்களும் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். இரு தேவியர்களுடன் சேவை சாதிக்கும் உற்சவ மூர்த்தம் பேரெழில் கொண்டது. ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். மூலவர் சிலா விக்ரஹமாகவும், உற்சவர் பஞ்சலோக விக்ரஹமாகவும் எழுந்தருளியுள்ளனர். நவராத்திரி நாட்களில் தாயாருக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.