அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோவில் (போரூர்)
God Name : மூலவர்: ராமநாத ஈஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
இலங்கை செல்லும் முன்பாக ஸ்ரீ ராமர் இப்பகுதியிலுள்ள நெல்லிவனம் வழியே சென்றாராம். அப்போது
பூமிக்கடியில் புதையுண்டிருந்த லிங்கத்தின் மீது நடந்ததால் கொண்ட தோஷம் நீங்க, இத்தலத்தில் ஒரு
மண்டலம் (48 நாட்கள்) தங்கி, லிங்க பிரதிஷ்டை செய்து விரதமிருந்து வழிபட்டாராம். விரதத்தின்போது
ஒரே ஒரு நெல்லிக்கனியை உண்டு சிரத்தையாக பூஜை செய்து வழிபட்டாராம்.
ராமர் குரு ஸ்தானத்தில் வைத்து வழிபட்டதால், இத்தலம் குரு ஸ்தலமாக கருதப்படுகிறது.
இது உத்ர ராமேஸ்வரம் எனவும் போற்றப்படுகிறது.
மூலவர்: ராமநாத ஈஸ்வரர், அம்பாள்: சிவகாமசுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி தரிசனம் தருகிறார் ராமநாத ஈஸ்வரர். சுயம்பு மூர்த்தம்.
அன்னை சிவகாமசுந்தரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
இது கஜப்பிருஷ்ட அமைப்பிலுள்ள விமானத்தைக் கொண்ட தூங்கானை மாடக்கோவில்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்றிலுள்ள பரிவார தேவதைகளும் அழகாக இருக்கின்றன.
சுவாமிக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். தீர்த்தம் தந்து சடாரி சாத்துகின்றனர்.
இங்கு பிரசாதமாகத் தரப்படும் நெல்லிக்கனியை உண்டால் ஆயுள் விருத்தியாகும் என நம்பப்படுகிறது.
சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களுள் இது குரு ஸ்தலமாக விளங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.