அருள்மிகு விருப்பாக்ஷீஸ்வரர் திருக்கோவில் (மயிலாப்பூர்)
God Name : விருப்பாக்ஷீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ரூபம் என்றால் உருவம், விரூபம் என்றால் இயல்புக்கு மாறானது எனப் பொருள். அக்ஷம் என்றால் கண்கள். இயல்புக்கு மாறாக இவ்விறைவன் மூன்று கண்களுடன் இருப்பதால் விருப்பாக்ஷீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். பழைய கல்வெட்டுக்கள் நிறைந்த புராதனக் கோவில். புனரமைப்பு பணிக்காக தோண்டியபோது கிடைத்த நடராஜர் சிலையை உற்சவ மூர்த்தியாக சிறப்பித்து பூஜித்து வந்துள்ளனர். ஞானசம்பந்தப் பெருமான் எலும்பை பூம்பாவையாக்கிய ஸ்தலம். உயிர்ப்பிக்கப்பட்ட பூம்பாவையின் தந்தை சிவநேச செட்டியார் நிர்வகித்த கோவில் எனக் குறிப்பொன்று கூறுகிறது. சென்னையிலுள்ள சப்த (ருத்ர) ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: விருப்பாக்ஷீஸ்வரர், அம்பாள்: விசாலாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் விருப்பாக்ஷீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். மிகப் பெரிய திருமேனியையும் உயரமான பாணத்தையும் கொண்டுள்ளார். இவரது நெற்றிக்கண்ணின் ரேகைகள் லிங்கத்தின் பாணப் பகுதியில் இருப்பதைக் காணலாம். இவருக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம் எனக் கூறப்படுகிறது. கிழக்கு பார்த்த சந்நிதி. அம்பாள் விசாலாட்சி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார். வரசித்தி விநாயகரும் ஆறுமுகப் பெருமானும் சந்நிதி கொண்டுள்ளனர். ஆறுமுகன் பச்சைக் கல்லில் உருவாக்கப்பட்ட திருமேனி கொண்டுள்ளார் என்கின்றனர். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிரதோஷ நாயகர், பிட்சாண்டியப்பர், சுக்ரவார அம்மன், சிவகாமி உடனாய நடராஜர் ஆகிய உற்சவ மூர்த்திகளைக் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.