அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் (மைலாப்பூர்)

God Name : மூலவர்: காரணீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

தனஞ்சயன்-காந்தி சுந்தரம் தம்பதியினரின் இல்லற வாழ்க்கையில் பல விதமான இடையூறுகளும், சஞ்சலங்களும் எதிர்கொண்டன. மன அமைதி வேண்டி க்ஷேத்ராடனம் புறப்பட்டுச் சென்ற தனஞ்சயன் மீண்டும் இவ்வூருக்கு வந்தபோது, லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டு வந்தான். அவனுடைய லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட இறைவன், அவனுக்கேற்பட்ட சோதனைகளுக்குரிய காரணங்களை விளக்கிக் கூறினார் என செவி வழி கதை ஒன்று நிலவுகிறது. நீர் தரும் மேகம் 'காரணி' எனப்படும். அதற்கு காரணமானவன் இறைவன். காரணத்திற்கே காரணமாக இருப்பவன் என்பதால் 'காரணீஸ்வரன்' என்ற பெயரைக் கொண்டாரோ? சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.
மூலவர்: காரணீஸ்வரர், அம்பாள்: ஸ்வர்ண லதாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காரணீஸ்வரர். சதுர வடிவம் கொண்ட அழகிய திருமேனி. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் இடம் பெற்றுள்ளனர். அம்பாள் ஸ்வர்ண லதாம்பிகை எனப்படும் பொற்கொடியம்மை அழகே உருவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். உட்பிரகாரத்தில் சர்வ மங்கள விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். சூரிய-சந்திரர்கள் மற்றும் நடராஜப் பெருமானை தரிசிக்கலாம். சித்தி-புத்தி சஹித வலம்புரி மஹா கணபதி, வள்ளி-தேவசேனா உடனாய சுப்ரமண்யர், அருணாசலேஸ்வரர் - உண்ணாமுலையம்மன், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், அசிதாங்க பைரவர் ஆகிய மூர்த்தங்களை வெளிப்பிரகாரத்தில் தரிசிக்கலாம். உஷா-சாயா சமேத சூரியநாராயணர் உடன் மற்றைய கிரகங்கள் காணப்படுகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.