மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்

God Name : இல்லை

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களான ராமகிருஷ்ணானந்தரும், சதாநந்தரும் 1897 ஆம் ஆண்டு சென்னை வந்தனர். பிலிகிரி அய்யங்காருக்குச் சொந்தமான ஐஸ்ஹவுஸ் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் தங்கி, மடம் நிறுவும் முயற்சிகளை மேற்கொண்டனர். 1907 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மடம் கட்டப்பட்டு, அதில் ராமகிருஷ்ணானந்தா குடியேறினார். அகுல கொண்டைய செட்டியார் வழங்கிய நிலத்தில், நன்கொடையாகப் பெற்ற பணத்தைக் கொண்டு இந்த மடம் பிராடிஸ் சாலையில் கட்டப்பட்டது. தற்போது இது ராமகிருஷ்ண மடம் சாலை என அழைக்கப்பட்டு வருகிறது. ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தாவைத் தொடர்ந்து சர்வானந்தர், யதீஸ்வராநந்தர், சாசுவதானந்தர், கைலாஸநந்தர், தபஸ்யானந்தர், ஸ்மரணானந்தர் ஆகியோர் மடத்தின் தலைவர்களாக இருந்தனர். தற்போது கௌதமானந்தர் தலைவராக இருக்கிறார். 1911 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஸ்ரீ சாரதா தேவியார் இங்கு சிறிது காலம் தங்கியிருந்தார் எனக் கூறப்படுகிறது. ராமகிருஷ்ணா மிஷன் சார்பாக 16 கல்வி நிலையங்கள் உள்ளன. ஆன்மீக மற்றும் கலாச்சார நூல்களை வெளியிடுகின்றனர். தர்ம வைத்தியசாலை, வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கேற்பது போன்ற பல சமூக சேவைகளைச் செய்கின்றனர். விவேகானந்தர் இல்லத்தில் கலாச்சார கண்காட்சிகளையும் நடத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.