அருள்மிகு பட்சீசுவரர் திருக்கோவில் (திருவோத்தூர்)
God Name : மூலவர்: பட்சீசுவரர் எனப்படும் கருடேசர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
கைலாஸநாதரைக் காண விரும்பிய திருமால், கருடனை அழைத்து, "திருக்கயிலை போகலாம் வா" எனப் பணித்தார். திருமாலை தனது தோளில் ஏற்றிக்கொண்டு பறந்த கருடன், பறக்கும் சமயத்தில், "தனது வலிமை மிக்க தோள்களில் ஏறி பறப்பதால்தான் திருமாலின் பராக்கிரமம் வெளிப்படுகிறது" என்ற கர்வமான சிந்தனையுடன் பறந்தது. கைலாஸ வாசலில் கருடனை காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று சிவபெருமானுடன் பேசிக்கொண்டிருந்தார் திருமால். சிவ தரிசனத்திற்கு வந்து செல்வோரை நெறிபடுத்தி காவல் புரிகின்ற நந்தி தேவர், சிறிது ஓய்வெடுப்பார் போல, ஓரிடத்தில் அமர்ந்தார். எதிரே கருடன் நின்று கொண்டிருந்தார். மூச்சை நன்றாக உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதுமாக மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருந்தார் நந்தி. புயல் வீசுவதை ஒத்து இருந்தது. எதிரிலிருந்த கருடனை முன்னும் பின்னுமாக அலைக்கழித்தது. திக்குமுக்காடிய கருடன் எதிரிலிருந்த பாறைகளில் மோதிக்கொண்டான். கருடனை அழைத்த சிவபெருமான், "உனது மனநிலையில் மாற்றம் கொண்டு கர்வம் கொண்டாய், அதனால் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது" என அறிவுரை வழங்கினார். தனது செய்கைக்கு வருத்தம் கொண்ட கருடன், இந்த இழிவிலிருந்து விடுபட, திருவோத்தூர் தலம் வந்து, லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, வழிபட்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கருடன் பூஜித்ததால் இவ்விறைவனை பட்சீசுவரர் என்றும் கருடேசர் என்றும் அழைக்கின்றனர்.
மூலவர்: பட்சீசுவரர், அம்பாள்: பார்வதி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் பட்சீசுவரர். கிழக்கு பார்த்த சந்நிதி. ருத்ராட்ச பந்தல் அமைத்துள்ளனர். தெற்கு நோக்கிய சந்நிதியில் அன்னை பார்வதி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ருத்ராட்ச மண்டபம் கொண்டுள்ள அம்பலவாணரும், முருகன், பைரவர், சனீஸ்வரன், ஹனுமன் ஆகிய மூர்த்தங்களையும், வன்னி மரத்தடி விநாயகரையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.