ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் பரம்பரையின் நிர்வாகத்தில், கடந்த 1471 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. திருமலை பெரிய ஜீயர் பரம்பரையில் வந்த முதல் ஜீயர் ஸ்ரீ லக்ஷ்மணாச்சார்யார் - ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் என்று திருநாமம் கொண்டு, முதல் ஜீயராகப் பொறுப்பு ஏற்றார். அது முதல் மடாலய நிர்வாகம் தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது 25வது ஸ்ரீ எம்பெருமானார் ஜீயராக, ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிவாச ராமாநுஜாச்சார்யார் மடாதிபதியாக இருந்து வருகிறார். சுமார் 5000 ஆதி திராவிடர்கள் இந்த மடாலயத்தில் வைஷ்ணவ தீட்சை பெற்றுள்ளனர். தீட்சை பெற்றவர்கள் ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிருந்தாவன் எனும் இடத்தில் மாத்வ ஸ்வாமிகள் மடம் ஒன்றுள்ளது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். பிள்ளைப்பேறு பிரார்த்தனை முக்கிய வேண்டுதலாக இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.