அருள்மிகு ஸ்ரீ மஹா மேரு தியான நிலயம் - ஸ்ரீ நகரம் (பண்ருட்டி-கண்டிகை)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மைசூர் அவதூத தத்த பீடம் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள், திருவேற்காடு சக்தி உபாசகர் ஸ்வாமி ராமதாஸ், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோரின் ஆசியோடு ஸ்வாமிஜி முருகபூஷணம் 1983ம் ஆண்டு ஸ்தாபித்த ஆலயம் என குறிப்பொன்று கூறுகிறது. வேண்டுகோள்: ராஜகோபுரம் மற்றும் மதில் சுவர் கட்ட தீர்மானித்துள்ளதால், பக்தர்கள் கட்டுமானப் பொருட்களாகவோ, பணமாகவோ தந்து திருப்பணி கைங்கர்யத்தில் பங்கு பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெரிய மேடையுடன் கூடிய மஹா மண்டபத்தின் மத்தியில் பிரதான கருவறை அமைந்துள்ளது. அதில் மஹா சிம்மாசனத்தில் ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி சிவ - சக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீவித்யா வழிபாட்டின்படி - ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியை ஸ்ரீ சக்கரம் அல்லது ஸ்ரீ மேரு வடிவமைப்பில் வழிபடுகின்றனர். அதன்படி ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியை ஸ்ரீ மஹா மேருவில் அருவுருவமாக எழுந்தருளப் பண்ணி வழிபடுகின்றனர். அன்னை மிகுந்த வரபிரசாதி. ஸ்ரீ மஹா மேருவை சுற்றிலும் 16 ஆவரண தேவதைகளை 16 மண்டபங்களுள் எழுந்தருளப் பண்ணி வழிபடுகின்றனர். ஒவ்வொரு நித்யா தேவிக்கும் யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மேருக்களுடன் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த தேவதைகளுக்குரிய மூலமந்திரமும், காயத்ரியும், வழிபாட்டின் பலன்களும் செப்புத் தகட்டில் எழுதி வைத்துள்ளனர். த்ரைலோக்ய மோஹன சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். அமாவாசை முதல் பௌர்ணமி வரை உள்ள நாட்களில் நாளுக்கு ஒருவராக ஆட்சி செய்து வரும் நித்யா தேவிகளை வழிபட்டு, கடைசி நாளன்று மஹாமேரு ஸ்ரீ மாதாவை வழிபடுகின்றனர். ஐந்து வாரங்கள் அல்லது மூன்று பௌர்ணமி தினங்களில் ஒவ்வொரு நித்யா தேவியையும் 16 முறை வலம் வந்து வழிபடுவோர் சகல சௌபாக்யங்களையும் பெறுவார்கள். பிரதமை தினம் - ஸ்ரீ காமேஸ்வரி, துவிதியை தினம் - ஸ்ரீ பகமாலினி, திருதியை தினம் - ஸ்ரீ நித்யக்லின்னா, சதுர்த்தி தினம் - ஸ்ரீ பேருண்டா, பஞ்சமி தினம் - ஸ்ரீ வஹ்நிவாஸினி, ஷஷ்டி தினம் - ஸ்ரீ மஹாவஜ்ரேஷ்வரி, சப்தமி தினம் - ஸ்ரீ சிவதூதி, அஷ்டமி தினம் - ஸ்ரீ த்வரிதா, நவமி தினம் - ஸ்ரீ குலசுந்தரி, தசமி தினம் - ஸ்ரீ நித்யா, ஏகாதச தினம் - ஸ்ரீ நீலபதாகா, துவாதசி தினம் - ஸ்ரீ விஜயா, த்ரயோதசி தினம் - ஸ்ரீ ஸர்வ மங்களா, சதுர்த்தசி தினம் - ஸ்ரீ ஜ்வாலா மாலினி, பௌர்ணமி தினம் - ஸ்ரீ சித்ரா. இவர்கள் எல்லோருமே ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியினுடைய அங்க தேவதைகள். சாட்சாத் அம்பிகையே பதினாறாவதான மஹா நித்யா தேவதையாக உள்ளார். ஸ்ரீ வாராஹி மற்றும் ஸ்ரீ ராஜ மாதங்கி புடை சூழ வீற்றிருக்கின்றாள் அம்பிகை. விநாயகர், சுப்ரமண்யர், கருமாரி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், தத்தாத்ரேயர் ஆகிய தெய்வங்களையும் சிறு சிறு மண்டபங்களில் எழுந்தருளப் பண்ணியுள்ளனர். சக்தி ஸ்தலங்களுள் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.