கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடாலயம். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை-மீனாட்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். தனது 16வது வயதில், பெற்றோருடன் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவிலுக்குச் சென்றவர், சொக்கநாதரைப் பிரிந்து வாரேன் என்று பெற்றோரைப் பிரிந்து அங்கேயே தங்கிவிட்டார். அங்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரரை தரிசித்தபடியே, சொக்கநாத வெண்பா இயற்றினார். திருவாரூர் தியாகராஜர் கோவில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில், யோக நிலையில் அமர்ந்திருந்த கமலை ஞானப்பிரகாசரைத் தனது குருவாக ஏற்று, சைவ சித்தாந்த நெறிகளைக் கற்றுணர்ந்தார். குருவின் கட்டளைப்படி தருமபுரம் வந்து, தருமபுரீஸ்வரர்-மதுராம்பிகை கோவிலை மையமாக வைத்து சிவ நெறிகளைப் பரப்பும் பணிகளைத் துவக்கினார். ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள பல திருக்கோவில்களில் ஆகம நெறிமுறை தவறாமல் பூசைகளை நடத்த வழிவகுத்தார். தற்போது 26வது குருமூர்த்தியாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பணிகளைத் தொடர்கின்றார். தமிழ்ப்பணி, திருக்குறள் உரைவளம், திருமுறைகளுக்கு உரை, கல்வி நிலையங்கள் ஏற்படுத்துதல் போன்ற பல நற்பணிகளை மேற்கொண்டுள்ள மடாலயம், ஞானசம்பந்தம் என்ற மாத இதழையும் வெளியிடுகிறது. தமிழில் சிறந்த சான்றோர்க்கு தருமையாதீனத் தமிழ்ப் புலவர் எனும் பட்டம் வழங்கப்படுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.