அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில் (திருச்சோபுரம் - தியாகவல்லி)

God Name : மூலவர்: சோபுரநாதர் எனப்படும் மங்களபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

முதற் குலோத்துங்க சோழனின் பட்டத்து தேவியாகிய தியாகவல்லி நிறுவிய ஆலயம். சோழபுரம் எனப் பெயருற்று பின்னர் சோபுரம் என்றானதாக கூறப்படுகிறது. கடலுக்கு மிக அருகாமையில் இருப்பதால் 150 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தில், மணலினால் மூடப்பட்டது. புதையுண்டு இருந்த ஆலயத்தை இரண்டு தம்பிரான்கள் கண்டுபிடித்து, மீண்டும் திருப்பணி செய்தனர். தம்பிரான் கண்ட ஸ்தலம் என்ற பெயரும் இருக்கின்றது. தேவாரத்திருத்தலம்
மூலவர்: சோபுரநாதர், அம்பாள்: சோபுரநாயகி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோபுரநாதர். சதுர ஆவுடையாருடன் கூடிய அழகான லிங்க மூர்த்தம். அகஸ்தியர் பூஜித்த லிங்கம். இவருக்கு மங்களபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மேற்கு பார்த்த சந்நிதி. ஐப்பசி மாதம் 16, 17, 18 தேதிகளிலும், மாசி மாதம் 22, 23, 24 தேதிகளிலும் மாலை நேரங்களில் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து பூஜை செய்கின்றன. அம்பாள் சோபுரநாயகி அழகு திருவுருவமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். இவருக்கு தியாகவல்லி என்ற பெயரும் உண்டு. கோஷ்ட மூர்த்தங்கள், அறுபத்திமூவர்களின் சிலா ரூபங்கள் யாவும் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.