அருள்மிகு வள்ளலார் திருக்கோவில் - சத்ய ஞான சபை (வடலூர்)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், வடலூரிலிருந்து 14 கி.மீ தொலைவிலும் உள்ள மருதூர் எனும் ஊரில், ராமைய்யா-சின்னம்மை தம்பதியினருக்கு ஐந்தாவது குழந்தையாக, 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பிறந்து, ராமலிங்கம் எனும் பெயர் கொண்டு வளர்ந்து வந்தார் வள்ளலார் பெருமான். வடு - அல் - ஊர் - வடலூர் - அதாவது குற்றம் இல்லாத ஊர் என்பர். வடலூரில் பார்வதிபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று, 1867 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் சமரச வேத தருமச்சாலை ஒன்றை தொடங்கினார் ராமலிங்க அடிகளார். இதனுள் ஒரு ஒளிக்கோவிலை 1871 ஆம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்களில் கட்டி முடித்தார். இதற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபை எனப் பெயரிட்டார். 25.1.1872 (தை மாதம் 13 ஆம் தேதி) முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. எண்கோண அமைப்பில், தாமரை மலர் வடிவில் அமையப் பெற்றது சத்யஞானசபை. நாற்கால் மண்டபத்தின் மையத்தில் ஜோதி வடிவில் இருக்கின்றார். சுற்றுப்பிரகாரமும் வழிபாட்டுக் கூடமும் இடம் பெற்றுள்ளன. 1874 ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் தேதி - புனர்பூசமும் பூசமும் கூடும் நன்நாளில் இரவு 12 மணிக்கு சித்திவளாக திருமாளிகையின் அறை ஒன்றுக்குள் புகுந்து கொண்டார். பிரதம சீடர்கள் அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டினார்கள். பின்னர் நமது கண்களுக்குத் தெரியாமல் அரூபமாகி, அருட்பெரும் ஜோதியானார். இங்கு வள்ளலார் - சுத்த தேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்ற மூவகை சக்திகளைப் பெற்று நித்ய தேகத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறுவர்.
சத்யதருமசாலையில், வள்ளலார் சந்நிதியில், வள்ளலாரின் ஐம்பொன் விக்ரஹம், அவர் ஏற்றிவைத்த ஜோதி, ஞான சிம்மாசனம், மற்றும் கடுக்காய் மையில் எழுதிய அருட்பெரும் ஜோதி அகவல் புத்தகம் ஆகியவற்றை தரிசிக்கலாம். வடலூர் அருகே, கருங்குழியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள மேட்டுக்குப்பம் எனும் ஊரில் சித்தி வளாக திருமாளிகை உள்ளது. வள்ளலார் ஏற்றி வைத்த அணையாத தீபம் இங்கே வழிபாட்டில் உள்ளது. இங்கு தீஞ்சுவை நீரோடை உள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்கின்றனர். பசித்தவர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் செய்கின்றனர். எண்கோண அமைப்பில், தாமரை மலர் வடிவில் அமையப் பெற்றது சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபை. நாற்கால் மண்டபத்தின் மையத்தில் ஜோதி வடிவில் இருக்கின்றார். சுற்றுப்பிரகாரமும் வழிபாட்டுக் கூடமும் இடம் பெற்றுள்ளன. 23.5.1967 அன்று ஏற்றி வைத்த அடுப்பு, 142 வருடங்களாக அணையாமல் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.