அருள்மிகு லட்சுமிநரசிம்ம பெருமாள் திருக்கோவில் (திருவாலி - திருநகரி)
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், உற்சவர்: திருவாலி நகராளன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
இரண்ய வதம் முடித்த பின்னர், நரசிம்மர் சீற்றம் அடங்காது இருந்த நிலையில், அவரை சாந்தப்படுத்தமாறு தேவி மஹாலட்சுமியிடம் வேண்டினார்கள் தேவர்கள். எம்பெருமானின் வலது தொடையில் திருமகள் அமர்ந்தாள். அவ்வாறு அமர்ந்தவளை நரசிம்மர் ஆலிங்கனம் செய்து கொண்டார்.
திரு ஆகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்ட ஸ்தலமாதலால் திருவாலி எனப் பெயர் கொண்டது.
திருவாலிக்கும் திருநகரிக்கும் இடையே உள்ள வேதராஜபுரம் எனும் ஊரில், பெருமாளையே வழிமறித்து அவரிடம் உள்ளவற்றை பறித்துக் கொள்ள முயன்ற திருமங்கை மன்னனை மன்னித்து உபதேசித்தருளிய ஸ்தலம் என்றும், தடுத்தாட் கொண்ட ஸ்தலம் என்றும் வரலாறு.
இந்த நிகழ்வை வேடுபறி உற்சவமாக ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். அப்போது ஸ்வாமி - தாயார் திருமணக் கோலத்தையும், திருமங்கை மன்னனுக்கு பெருமாள் மந்திர உபதேசம் செய்யும் அழகையும் காணலாம்.
(பங்குனி உத்திர பெருவிழாவின் முதல் நாள்)
சூலி நாட்டை தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தார் திருமங்கை மன்னன். இதனால் ஆலிநாடான் என்பர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நாங்கூர் பஞ்ச நரசிம்ம ஸ்தலங்களுள் ஒன்று.
ஏகாதச ருத்ர பீடங்களுள் - தேஜோமய பீடம், மூலவர்: கலிக்காமேஸ்வரர் (அன்னப்பன்பேட்டை)
மூலவர்: லட்சுமி நரசிம்மர், உற்சவர்: திருவாலி நகராளன்.
தாயார்: அமிர்தவல்லி, உற்சவத் தாயார்: பூரணவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், அழகிய சிங்கராக, மேற்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பொதுவாக நரசிம்மரின் இடது தொடையில் அமர்ந்து தரிசனம் தரும் மஹாலட்சுமி, இங்கு வலது தொடையில் அமர்ந்திருப்பது வேறு திவ்ய தேசங்களில் காணமுடியாதது.
பூர்ண மகரிஷி மற்றும் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம்.
(திருவாலி - திருநகரி ஆகிய இரண்டு ஸ்தலங்களும் இரட்டை திருப்பதிகள் - ஒரே திவ்ய தேசமாக பாடப்பட்டுள்ளது)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.