அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (புது அக்ரஹாரம்)

God Name : மூலவர்: அகஸ்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

தர்மத்திற்காக குளம் வெட்டிய ஊர் என்பதால் தர்மகுளம் என்றானது. குளம் வெட்டும்போது கிடைத்த விநாயகர், தர்ம விநாயகர் எனும் திருநாமத்தோடு இங்கு கோவில் கொண்டு தரிசனம் தருகின்றார். சரபோஜி மன்னனின் மூதாதையர்களுள் ஒருவர், இவ்வாலயம் வந்தபோது, ஆவுடையார் மீது கொள் தான்ய மூட்டையை கட்டி வைத்து விட்டு, சிவபெருமானாக கருதி வழிபடலானார். அந்த தான்ய மூட்டை லிங்க உரு கொண்டு எழுந்தது. தானாக வடிவுற்றதினால் தான்தோன்றீஸ்வரர் எனப் பெயர் பெற்றது. 200 ஆண்டுகளுக்கு முன்பாக கடல் சீற்றத்தினால் கடலுக்குள் மூழ்கி மறைந்த சங்கமுகேஸ்வரர் கோவில் மூலவரையும் அம்பாளையும், இந்த அக்ரஹாரத்து மக்களின் பெரு முயற்சிகளினால், கடலிலிருந்து மீட்டு இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
புது அக்ரஹாரம் தர்மகுளம் கிராமத்தின் ஒரு பகுதியாகும். சிவாலய நியதிப்படி, புது அக்ரஹாரத்தில் மூலஸ்தானம் அமையப் பெற்றுள்ளது. மூலஸ்தானத்தில் மூலவர் அகஸ்தீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக கிழக்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகிறார். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அன்னை அகிலாண்டேஸ்வரி எழுந்தருளியுள்ளார். நிருதி பாகத்தில் ஸ்தல விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். மேற்கு நோக்கி தான்தோன்றீஸ்வரர், அருகே அருணாசலேஸ்வரர், வடமேற்கில் முருகப் பெருமான், கஜலட்சுமி ஆகிய அழகு திருவுருவங்களை தரிசிக்கலாம். உள்கோவிலில் சர்வலோக நாயகி உடனாய சங்கமுகேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.