அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக் கோவில் (வல்லக்கோட்டை)
God Name : ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
நாரத மகரிஷியை அவமதித்தான் சலங்கொண்டபுர மன்னன் பகீரதன். வனத்தில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த கோரன் எனும் அசுரன், நாரதரை சந்தித்து ஆசி கோருகிறான். பகீரதனை வென்றால் உனது திக்விஜயம் பூர்த்தியாகும் என்கிறார் மகரிஷி. அதன்படி கோரன் பகீரதனை வென்றான்.
ராஜ்யத்தை இழந்து நாட்டை விட்டு ஓடிப்போன பகீரதன் துர்வாசரின் ஆலோசனைப்படி, வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து, பாதிரி மரத்தடியிலிருந்த முருகப் பெருமானை வழிபட்டு, இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என ஸ்தல வரலாறு.
வல்லன் எனும் அசுரனின் தலைநகரமாகவும், கோட்டையாகவும் முன்பொரு காலத்தில் இருந்ததால், 'வல்லன் கோட்டை' எனப் பெயருற்று, நாளடைவில் மருவி 'வல்லக்கோட்டை' என்றானதாம். கோட்டை ஆண்டவர் என்ற பெயரே மருவி 'கோடையாண்டவர்' ஆகியிருக்கலாம் என்கின்றனர்.
இந்திரன் தனது வஜ்ராயுதத்தை ஊன்றி தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டுள்ளான் என ஸ்தல வரலாறு.
ஸ்ரீ விஜய கணபதியை வணங்கி ஆசி பெற்று ஆலயத்துள் சென்று மற்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஏழடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் நெடிதுயர்ந்த கோலமாக தரிசனம் தருகின்றார். கண்களையும் மனதையும் விட்டகலாத எழில் வதனம். குமிழ் சிரிப்புடன் கூடிய திருமுகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றன.
தபஸ் காமாட்சி, ஆஞ்சநேயரை ஆலிங்கனம் செய்யும் ஸ்ரீராமர் போன்ற சிற்பங்கள் அர்த்த மண்டபத் தூண்களில் காணப்படுகின்றன. அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள்.
காமிகா ஆகமம் என்ற விசேஷ முறைப்படி நித்ய பூஜைகள் அனைத்தும் சிறப்பாக நடத்துகின்றனர்.
வல்லக்கோட்டையானுக்கு வெள்ளிக்கிழமை விசேஷம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.